நீர்வேலி சென்மேரிஸ் விளையாட்டக்கழகத்தினரால் நடாத்தப்பட்ட மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
நீர்வேலி சென்மேரிஸ் விளையாட்டக் கழகத்தினரால் 12.04.2015 பிற்பகல் நடாத்தப்பட்ட மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் சிறுப்பிட்டி கலை ஒளி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தினை பெற்றுக்கொண்டது. முதலாவது சுற்றில் சிறுப்பிட்டி கலை ஒளி விளையாட்டுக்கழகம் நீர்வேலி காமாட்சியம்பாள் விளையாட்டுக் கழகம் ஆகியன விளையாடி சிறுப்பிட்டி கலை ஒளி விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது. இரண்டாவது சுற்றில் நீர்வேலி சென்மேரீஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் அளவெட்டி பாரதி விளையாட்டுக்கழகம் விளையாடி அளவெட்டி பாரதி விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது. மூன்றாவது இறுதிச்சுற்றில் சிறுப்பிட்டி கலை ஒளி விளையாட்டுக்கழகம் அளவெட்டி பாரதி விளையாட்டுக்கழகம் மோதி சிறுப்பிட்டி கலை ஒளி விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.
0 Comments