நீர்வேலி செல்லக்கதிர்காம முருகனின் விஸ்வரூபதரிசனமும், வெற்றி வேல் பெறும் காட்சியும்..
நீர்வேலி செல்லக்கதிரகாம முருகன் திருக்கோவிலில் இன்று மதியம்12.30மணியளவில் விசேட ஷண்முகார்ச்சனையுடன், சூரபத்மனுக்கு ஆறுமாமுகத்துஅருள்வள்ளல் விஸ்வரூபம் காட்டியருளும் திருவிளையாடல் நடைபெறற்து.அதனைத் தொடரந்து அருகிலுள்ள ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் (பழையம்மாள்)ஆலயத்திற்கு முருகன் எழுந்தருளினார்..அங்குஅன்னையால், குமரவேளுக்கு சூரனை அழித்து யாவரதும் துயர்துடைப்பதற்காக வெற்றி வேல் வழங்கப்பட்டது…இது இவ்வாறிருக்க, சூரபத்மனின் திக்விஜயம் ஒரு புறம் நீர்வேலியின்(Neervely North & West) ஒருபகுதியைச் சுற்றி வந்தது…நாளை பிற்பகலில் செல்லக்கதிர்காமத்துத் திருவீதியில், சூரனுக்குகந்தவேளுக்கும் நேரடிச்சமர் இடம்பெறவுள்ளது.
0 Comments