நீர்வேலி செல்லக்கதிர்காமகோவிலில் கந்தசஷ்டி கவச பாராயணம்
விடாது பொழியும் கனமழைக்கு மத்தியிலும் நீர்வேலி செல்லக்கதிர்காம ஸ்வாமி திருக்கோவிலில் அதிகாலை முதலே நூற்றுக்கு மேற்பட்ட முருக பக்தர்கள் கூடியிருந்து “ஒரு நாள் முப்பத்தாறு முறை கந்தசஷ்டி கவச பாராயணத்தை” பிற்பகல் வரை சிறப்பாக நிறைவேற்றினர்..தட்டில் வீபூதியை பரப்பி அதில் சுப்ரம்மண்ய யந்திரத்தை எழுதி அதன் முன் பக்தர்கள் கூடியிருந்து நியபத்துடன் கந்தசஷ்டி கவச பாராயணம் செய்தனர்.நிறைவாக ஷண்முகப்பெருமானுக்கு ஷண்முக அர்ச்சனை நிகழ்ந்து பிரதக்ஷணமாக பாராயணமும் நடந்தது.. பேச்சாளர், விரிவுரையாளர் ச.லலீசன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்..கலந்து கொண்ட அன்பர்களுக்கு திருச்செந்தூர் மரபை ஒட்டி பன்னீர் இலை வீபூதி பிரசாதம் வழங்கப்பட்டது..மிகவும் பக்தி பூர்வமாக அமைந்த இந்நிகழ்வு முருகனின் திருவருட்திறனை தெளிவாக வெளிப்படுத்தியது..
0 Comments