10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி செல்லக்கதிர்காமத்தில் கதிர்காம வடிவ அலங்கார திருவாசல் வளைவு அத்திவாரமிடல்

நீர்வேலி செல்லக்கதிர்காம முருகன் ஆலயத்தில் ஸ்கந்தசஷ்டி விழாவின் முதல் நாளான இன்று மதியம் சுபவேளையில் கதிர்காம வடிவ அலங்கார திருவாசல் வளைவு முகப்பிற்கான அத்திவாரமிடும் நிகழ்ச்சி நூற்றுக்கணக்கான அடியொர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது..
தனித்துவமான மரபியல் கட்டிட அம்சமான இவ்வடிவ முகப்பு நீர்வேலியில் உள்ள ஆலயத்தில் அமைகிற போது அது சிறப்பானதாக அமையும் என்று நம்பப்படுகிறது. வரலாற்றுச்சிறப்பு மிக்கதும் ஹேமகூடம் என்று புராணங்கள் பேசுவதுமான தென்னிலங்கை கதிர்காமம் திருப்புகழ் பாடல்கள் பெற்ற மிகப்பழமையான திருத்தலம்.இந்த தலத்திலிருந்து ஒரு அற்புத நிகழ்வு மூலம் நூறாண்டுகளுக்கு முன் நீர்வேலி கதிர்காமம் உருவானது.1917ஆம் ஆண்டளவில் உருவான இந்த தல நூற்றாண்டின் சிறப்பம்சமாகவே இந்த கட்டுமானம் நிகழவுள்ளது.சித்தர்களின் சமாதிகள் அபைந்திருப்பதும், சூழலெங்கும் தெய்வீக விருட்சங்களின் நெருக்கமும் இந்த நீர்வை கதிர்காமத்துச் சிறப்புக்களில் குறிப்பிடத்தக்கவை

இறைவனுடைய திருவடிகளுக்கு இணையாக பேசப்படுவம் கோபுர முகப்பான இந்த கதிர்காம வடிவ அலங்கார திருவாசல் வளைவுக்கட்டுமானம் முழுமையாக முருகனடியார்களின் நிதிப் பங்களிப்பிலேயே உருவாகவுள்ளது.

நிதிப்பங்களிப்பைப் பொறுத்து முதற்கட்டமாக நடுவிலுள்ள பிரதான வளைவும் அடுத்த கட்டமாக மற்றைய இரு வளைவுகளும் அமையவுள்ளன.

எதிர்பாராத விதமாக இன்றைய நாளில் அடியவர் ஒருவரின் உபயமாக கஜவாகனம் ( வெள்ளானை வாகனம்) ஒன்று கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டு அதில் பெருமான் தென்னக கதிர்காம கடவுள் போல உலா வந்தமையும் சிறப்பாக சொல்லத்தக்கதே.

எனவே, தென்னிலங்கை கதிர்காம பெரிய கோவிலில் ( மஹா தேவாலய)பல நூறாண்டாக உள்ள இந்த தனித்துவமான கட்டமைப்பு யாழக நீர்வையிலும் விரைவில் உருவாகும் என நம்பலாம்.

இந்த பணிக்கு உதவ விரும்பும் அடியவர்கள் மேற்படி ஆலய பரிபாலன சபையாரிடம் கொடுத்து பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்லக்கதிர்காம செவ்வேளின் கதிர்காம வடிவ திருவாசல் வளைவு முகப்பு உயர நாமும் பிரார்த்திப்போம்..

(thanks- mayurakiri  sarma)

0 Comments

Leave A Reply