10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி செல்லக்கதிர்காம முருகன் திருக்கோயில் மஹோற்சவம்[:]

[:ta]தனிச்சிறப்பும் பழமையும் மிக்க நீர்வேலி செல்லக்கதிர்காம முருகன் திருக்கோயில் மஹோற்சவம் நாளை சனிக்கிழமை பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பன்னிரு தினங்கள் சிறப்புற நிகழவுள்ளது.

இப்பெருவிழாவில் புராண ஐதீக சிறப்பு உற்சவங்களாக இரண்டாம் திருநாளன்று தேவசேனாபதிப்பட்டமும் மூன்றாம் நாள் அருணகிரிநாதர் உற்சவமும் நான்காம் நாள் பக்தர்கருளும் பாவனையும் ஐந்தாம் நாள் திருநடனமும் ஆறாம் நாள் சந்தானகோபாலர் உற்சவமும் ஏழாம் நாள் மாம்பழத்திருவிழாவும் எட்டாம் நாள் சிவ பூஜை காட்சி மற்றும் திருக்கைலாச தரிசனமும் இடம்பெறவுள்ளன.

அத்துடன் ஒன்பதாம் நாள் வேட்டை உற்சவமும் பத்தாம் நாள் சப்பர உற்சவமும் 26ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 27ஆம் தி கதி தீர்த்த உற்சவமும் மறுநாள் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறவுள்ளன.[:]

0 Comments