10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி தெற்கு இந்து மயான வீதிக்கு சீமெந்தினாலான பாதை

இலங்கை ஜனாதிபதியின் ”நிறைவான கிராமம்” (சப்றி கம ) எனும் செயற்திட்டத்தின் கீழ் பல அபிவிருத்தி திட்டங்கள் மெற்கொள்ளப்பட்டவருகின்றது. அதில்  நீர்வேலி தெற்கு அங்கஜன் இளைஞர் அணியின் முயற்சியில்  யாழ்மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான  செயற்திட்டத்தில் இந்து மயான வீதிக்கு சீமெந்தினாலான பாதை அமைக்கப்பட்டு வருகின்றது. மிக நீண்டகாலமாக மழை காலத்தில் நீர்வேலி தெற்கு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உட்பட்டு வந்தனர். தற்போது விடிவு காலம் நீர்வேலி தெற்கு இந்து மயான வீதிக்கு கிடைத்துள்ளது. நீர்வேலி தெற்கு அங்கஜன் இளைஞர் அணியின் முயற்சியினாலேயே இது சாத்தியமாயிற்று. எனவே இளைஞர்களின் செயற்பாடுகளுக்கு எமது பாராட்டுக்கள்.

 

0 Comments

Leave A Reply