10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி இளைஞர்களின் முன்னோக்கிய செயற்பாடுகள்[:]

[:ta]

நீர்வேலி   இளைஞர்களின் முன்னோக்கிய செயற்பாடுகள் அண்மைக்காலமாக அனைவரினதும் கவனத்தை ஈர்த்து வருகின்றது. நீர்வேலி வாய்க்காற் தரவைப்பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த இரு பிரிவு  இளைஞர் குழுக்கள் வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உதவி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவ் இளைஞர்களின் செயற்பாடுகள் நீர்வேலியின் அனைத்துப்பிரிவினராலும் பராட்டப்பட்டது. அதன் பின்னர் நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைச் சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக இளைஞர்களின் எழுச்சியான செயற்பாடுகள் மகிழ்ச்சிகரமாக அமைகின்றது. விளையாட்டு மைதானத்தினை அமைத்தல் விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்தல் மற்றும் அன்பளிப்பாக பெறுதல் அத்தடன் வீதி மின் விளக்குகளை பொருத்துதல் என பல பணிகளை செய்து வருகின்றனர். நீர்வேலியில் மாலை வைரவர் கோவில் இளைஞர்களும் தங்கள் பிரதேச அபிவிருத்தி  மற்றும் ஒற்றுமையான செயற்பாடுகள் பலவற்றில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் நீர்வேலி வடக்கில் அன்னை பரலோக மாதா கோவில் இளைஞர்கள் அண்மையில் மிகப்பெரிய சனசமூக நிலையம் மற்றும் அதனுடன் இணைந்த கலாச்சார மண்டபம் என அமைத்து தமது சூழல் இளைஞர்களின் ஒற்றுமையினை பறைசாற்றும் பல செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். எமது ஊரில் உள்ள பாடசாலைகள் சனசமூக நிலையங்கள் முன்பள்ளிகள் மற்றும் பிரதான  கோவில்கள் அத்துடன் ஊரின் அபிவிருத்திப்பணிகள் என்பற்றில் முழு மனதுடன் ஈடுபடவேண்டும். ஒரு சில தீய சக்திகள் தங்களின் சுய இலாபத்திற்காக உங்களை பயன்படுத்த அனுமதிக்காமல் ஊரினை புதிய பாதையில் கொண்டு செல்லவேண்டியது உங்களின் கடமையாகும். நீர்வேலி இளைஞர்களின்  எழுச்சி நீர்வேலியின் புதிய வளர்ச்சியாகும்.

[:]

0 Comments

Leave A Reply