10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி தெற்கு கிராமசேவையாளர் இடமாற்றம்….

264585_4927574673876_1422148400_nநீர்வேலி தெற்கு பகுதியின் கிராம சேவையாளர் திரு.சி.தயாபரன் அவர்கள்  இடைக்காடு -வளலாய் பிரதேசத்திற்கு 14.03.2016 அன்று இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். 02.05.2012 ஆம் ஆண்டு நீர்வேலி தெற்கு பிரதேசத்திற்கு வந்து தனது கடமைப் பொறுப்பேற்று ஏறத்தாழ நான்கு ஆண்டுகள்  நடுநிலையோடு தனது சேவையினை ஆற்றியிருந்தார். அத்துடன் எமது இணையத்தின் ஆலோசனை சபையிலும் அங்கத்தவராக இருந்துவருகிறார். எமது பிரதேசத்திற்கு ஆற்றிய சேவைக்காக எமது இணையம் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது .புதிய கிராம சேவையாளராக உரும்பிராயைச் சேர்ந்த திரு.S.வசந்தகுமார் அவர்கள் கடமைப் பொறுப்பினை ஏற்றுள்ளார்.

0 Comments