10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி தெற்கு கிராமசேவையாளராக திரு.க.உபேந்திரன் அவர்கள்[:]

[:ta]

நீர்வேலி தெற்கு ஜே 268 பிரிவின் புதிய கிராம சேவையாளராக திரு.க.உபேந்திரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.இது வரைகாலமும் கிராமசேவையாளராக திரு.சி.தயாபரன் அவர்கள் நீ்ண்ட காலமாக சேவைபுரிந்துள்ளார். திரு.சி.தயாபரன் அவர்கள் நீர்வேலி தெற்கு மக்களுடன் மிகவும் நிதானமாகவும் நட்புடனும் தனது சேவைகளைச் செய்திருந்தார். நீர்வேலி தெற்கு மக்களின் மனம்கவர்ந்த கிராம சேவையாளராக திரு.சி.தயாபரன் அவர்கள் இருந்துள்ளார்.எனவே திரு.தயாபரன் அவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு புதிய கிராமசேவையாளர் திரு.க.உபேந்திரன் அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம். உங்களது சேவை எமது ஊரிற்கு  சிறப்பாக அமைய வாழ்த்துகின்றோம்.

[:]

0 Comments

Leave A Reply