நீர்வேலி தெற்கு பாலர் நிலையத்தில் கணனி ஆய்வுகூடத்திறப்பு விழா இனிதே நடைபெற்றது
நீர்வேலி தெற்கு பாலர் நிலையத்தில் கணனி ஆய்வு கூடத்திறப்பு விழாவானது இன்று 03.10.2013 நடைபெற்றது.மேற்படி விழாவானது மாலை 4.00 மணியளவில் நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் கிளை தலைவர் திரு.மா.திருவாசகம் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து பெற்றார் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பங்குபற்றி விழாவைச்சிறப்பித்தனர்.அதனைத்தொடர்ந்து அதன் தலைவர் திரு.செ.பத்மநாதன் தலமையில் உரையும் இடம்பெற்றது.பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த திரு.மா.திருவாசகம் அவர்களும் மற்றும் நீர்வேலிக்கிளை தலைவர் திரு.குணநாதனும் உரையாற்றினார்.
0 Comments