நீர்வேலி தெற்கு பாலர் பகல் விடுதியில் பொதுக்கூட்டம்(09.02.2013) இன்று நடைபெற்றது
நீர்வேலி தெற்கு பாலர் பகல் விடுதியில் 26.01.2013 அன்று நடைபெற்ற நிர்வாகக்கூட்டத் தீர்மானத்தின் பிரகாரம் இன்று 09.02.2013 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இப்பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டது.இதில் புதிய தலைவராக அத்தியார் இந்துக்கல்லூரி அதிபர் திரு செ.பத்மநாதன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.செயலாளராக திருமதி யோ.உமாதேவியும் பொருளாளராக திரு பவானந்தன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து ஏனைய உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.நீர்வேலி தெற்கு பாலர் பகல் விடுதிக்கென புதிய யாப்பு ஒன்றின் தேவையால் அதனை அமைப்பதற்கான குழுவும் அமைக்கப்பட்டது.
திரு பத்மநாதன், திரு.குணநாதன், திரு.சிவராஜா, திருமதி.உமாதேவி,திருமதி. ருக்மணி,திருபரராஜசிங்கம் திரு.மகாலிங்கம் திரு.சோதிலிங்கம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகசபையினருக்கும் யாப்பு குழுவிற்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
0 Comments