10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி தெற்கு மக்களால் விதானையார் அவர்களுக்கு கௌரவிப்பு

நீர்வேலி தெற்கு கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றி தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெறும் மதிப்புக்குரிய கிராம சேவையாளர் திரு.கணபதிப்பிளளை உபேந்திரன் அவர்களுக்கு 09.01.2021 சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் ஸ்ரீ சப்பிரமணிய சனசமூகத்தில் நிலையத்தலைவர் திரு.கணபதிப்பிள்ளை அவர்கள் தலைமையில் சேவைநலன் பாராட்டும் பிரியாவிடை வைபவமும் நடைபெற்றது. எங்கள் ஊரிற்கு வெளி இடங்களில் இருந்து சேவை செய்ய வந்து நீர்வேலி மக்களுக்கு உயரிய சேவையினை ஆற்றிவரும் அற்றிய அன்பர்களுக்கு நீர்வேலி மக்களின் நன்றியுணர்வும் அவர்களுக்கு மக்களால் வழங்கப்படுகின்ற கௌரவமும் விழாக்களும் அது விசேடமாக நீர்வேலி மக்களுக்கே உரிய உயரிய பண்பு ஆகும். அந்த வகையில் மதிப்புக்குரிய கிராமசேவையாளர் அவர்களுக்கு நீர்வேலி ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலைய நிர்வாகத்தினரும் அவ்விடத்து இளைஞர்களும் வழங்கிய பாராட்டு மிகச்சிறப்பாக செய்யப்பட்டதொன்றாகும். வாழ்த்துக்கள் இளைஞர்களே. நிலையத்தலைவர் அவர்களே தொடரட்டும் உங்கள் பணி

 

0 Comments