10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி நலன்புரிச்சங்கம் – கலை மாலை 2016

லண்டனில் Attiar இந்து கல்லூரியின் முன்னாள் மாணவர்களும், நீர்வேலி நலன்புரிச்சங்க உறுப்பினர்களும் இணைந்து கலை மாலை 2016 எனும் வருடாந்தர நிகழ்வினை நடத்த முடிவு செய்துள்ளனர்.இந்நிகழ்வானது ஜூன் மாதம் 25ம் திகதி வூட்பிரிட்ஜ் மேல்நிலைப்பள்ளி அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. எங்களது வருடாந்தர நிகழ்வானது கலை, கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கில் உள்ளூர் திறமைசாலிகளை ஊக்குவிப்பதில் எப்போதும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிகழ்வானது நமது கல்வி நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டு நிதி திரட்ட முன்னாள் மாணவர்கள், நலம் விரும்பிகள் ஆகியோர்களை ஒன்றிணைந்து பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆண்டு ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துள்ளோம். ராகாஸ் இசை குழுவினரின் இசை நிகழ்ச்சி சரியாக 5:30 மணி அளவில் துவங்க உள்ளது. விருப்பமான திரை இசை பாடல்களை அடுத்து நடன நிகழ்ச்சிகளும் அதை அடுத்து வீணை மற்றும் வயலின் கச்சேரிகளும் நடைபெற உள்ளது. தொடர்ந்து ராகாஸ் வழங்கும் மாலை இசை கண்டிப்பாக பார்வையாளர்களை கவரும்படி அமையும்.

மட்டுமின்றி சுவையான வடை, ரோல்ஸ் மற்றும் இனிப்பு கார வகைகளும் குளிர்பானங்கள் தேநீர் உள்ளிட்டவைகளும் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்விற்கு தனியொருவருக்கான கட்டணம் 12 பவுண்ட் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மட்டுமின்றி 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு 25 பவுண்ட் எனவும் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இரவு உணவு நிகழ்வின்போது வழங்கப்படும். மாலை 5 மணி சரியாக பொதுமக்களை அரங்கினுள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

qw

0 Comments