10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி நலன்புரி சங்கம் கனடா வருடந்தோறும் நடாத்தும் மழலைகளுக்கான பரீட்சை இனிதே நிறைவுபெற்றது

நீர்வேலி  நலன்புரி  சங்கம்  கனடா  வருடந்தோறும்   நடாத்தும் மழலைகளுக்கான  பரீட்சை கடந்த  8 ம் திகதி  காலை  9.00 மணிக்கும்  பிற்பகல்  1.00  மணிக்கும்  இடையில்  Nallur Kandaswamy  Temple. 20Nuggt Ave  Unit 1 Scarborough‎ On‎ M1S 3B1 Canada.எனும் முகவரியில் Grade 1   ( 04 வயது) இருந்து Grade 09 (14 வயது) வரையுள்ள மாணவர்களுக்காக  நடைபெற்றது.இப்பரீட்சையில் ஆங்கிலம் கணிதம் தமிழ் போன்ற பாடங்கள்  உள்ளடக்கப்பட்டிருந்தது.இந்தபரீட்சை முடிவுகள் எதிர்வரும் தை மாதம் 11 ம் திகதி நடைபெறும் வருடாந்த கலாச்சார இரவு விருந்தின் போது வெளியிடப்பட்டு பரிசில் வழங்கும் நிகழ்வு வாழையடி வாழையின் போது இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பரீட்சையில் பங்குபற்றிய சிறுவர்கள் பெற்றோர்கள் மற்றும் இப்பரீட்சையை நடாத்துவதற்கு உதவிபுரிந்தஅனைத்து உறவுகளுக்கும் தமது உளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர் நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினர். 

NeervelyExam2013-6

NeervelyExam2013-5NeervelyExam2013-2 (1)NeervelyExam2013-3 (1)NeervelyExam2013-4NeervelyExam2013-7NeervelyExam2013-8NeervelyExam2013-9

0 Comments

Leave A Reply