நீர்வேலி நெனசல(Nenasala) கணனி நிலையத்தின் ஓராண்டுப்பூர்த்தி
நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதீயில் அமைந்துள்ள மாதர்சங்க கட்டடத்தில் நெனசல (Nenasala) கணனி நிலையம் இயங்கிவருகிறது. கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 16.09.2014 அன்று ஓராண்டுப்பூர்த்தியடைந்துள்ள இக் கணனி நிறுவனம் கோப்பாய் பிரதேச செயலகத்தின் கீழ் கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாணவர்களுக்காக குறுகிய கட்டணத்துடன் இயங்கிவருவதுடன் தரமான கணனிக்கல்வியை மாணவர்களுக்காக வழங்கி வருகிறது. மேற்படி கணனி நிறுவனம் நீர்வேலியில் அமைந்திருப்பது எமது மாணவர்களுக்கு வாய்ப்பாக அமைகின்றது. நெனசல( Nenasala) கணனி நிலையத்தின் ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு கற்று வெளியேறிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 16.09.2014 அன்று இடம்பெற்றது.
0 Comments