newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

நீர்வேலி மாலை வைரவர் தேவஸ்த்தானம் -மக்களுக்கு உதவி

உலகலாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கோரோணா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்ப்பட்டிருக்கும் அசாதாரண சூழலைக்கருத்திற் கொண்டு நீர்வேலி மேற்கு மாலை கிராமத்தில் பிறந்து தற்பொழுது கனடா நாட்டில் வசிக்கும் ஆனந்தராஜா உசாந்தினி அவர்களின் நிதி உதவியின் கீழ் மாலைவைரவராலய நிர்வாக சபையினரும் ஸ்ரீ சுவர்ணா சனசமூக நிலைய இளைஞர் அணியினரும் இணைந்து நாளை காலை 10 மணியளவில் ஸ்ரீ சுவர்ண சனசமூக நிலையத்தில் வைத்து சுமார் 120 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்படும்.

இவ் உதவியை வழங்கிய ஆனந்தராஜா உசாநந்தினி அவர்களுக்கும் மாலை இளைஞர்களுக்கும் பயனாளிகள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

மேலும் இவ்வாறான உதவிகளை செய்யவிரும்பும் புலம் பெயர் நாட்டுகளில் வசிக்கும் உறவுகள் கீழ்க்கானும் தொலை பேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

சுவர்ணான் தலைவர் ஸ்ரீ சுவர்ணா சனசமூக நிலையம், பொருளாளர் மாலை வைரவர் ஆலயம். 0094762515322.
நிக்சன் தலைவர் மாலை வைரரவர் ஆலயம்
0094770395786.
சுமன் செயளாளர் மாலை வைரவர் ஆலயம்
0094770617943

0 Comments