10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு காணி கொள்வனவு செய்வதற்கு உதவுமாறு கோரிக்கை

ஏறக்குறைய 15 வருடங்களுக்கு முன்பு கிராம சேவையாளர் பிரிவு J/270 ஆக பிரிக்கப்பட்டது.ஆனால் இன்றுவரை எந்தவித அபிவிருத்தியையும் காணாத இக்கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனை அறிந்த கோப்பாய் பிரதேச செயலர் இப்பகுதியில் 3 பரப்புக்காணியை யாராவது அன்பளிப்புச்செய்தால் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குரிய கட்டிடங்களை தாம் இலவசமாக அமைத்துத் தருவதாக கூறியுள்ளார். இக்கட்டிடங்களில் நடைபெறும் சேவைகள் (நீர்வேலி வடக்கு, நீர்வேலி தெற்கு ,நீர்வேலி மேற்கு) முழு நீர்வேலிக்கிராமத்திற்கும் ஏற்புடையதாகும். எனவே இக்காணி கொள்வனவு செய்வதற்கு ரூபா 15 இலட்சம் தேவையாகவுள்ளது. நீர்வேலி மேற்கில் வசிக்கும் மக்களில் விவசாயிகளும் நாளாந்த கூலி வேலை செய்பவர்களும் 90 வீதமானவர்களாகும். இவர்களினால் இத்தொகை பணத்தை ஈடு செய்ய முடியாதுள்ளது. இன்று நீர்வேலிமக்கள் ஒரு கூட்டம் நடாத்துவதென்றாலும் இடமில்லாது மரநிழலில் நடாத்துகிறார்கள். இதற்கு எமது கிராமசேவையாளர் சாட்சி.

இம் மூன்று பரப்புக் காணியை கொள்வனவு செய்து அன்பளிப்புச் செய்வதால் அதில் அமைக்கப்படவுள்ள கட்டிடங்களின் விபரங்கள் பின்வருமாறு
1. முன்பள்ளி (பாலர் கல்வி நிலையம்)
2. சுகாதாரப்பகுதி
3. கிராம சேவையாளர் கந்தோர்
4. சனசமூக நிலையம்
5. பொதுநோக்கு மண்டபம்
6. சமுர்த்திக்கந்தோர்.

இம் மூன்று பரப்புக் காணியில் 01 பரப்புக்காணிக்குரிய 05 இலட்சம் ரூபாவை திரு.சண்முகநாதன் சிறிதரன் (லண்டன்) அவர்கள் கிராம முன்னேற்றச் சங்கத்திற்கென அன்பளிப்பாக வழங்கியுள்ளார். ஊர் மக்களால் ரூபா 05 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மிகுதி 01 பரப்புக் காணியை கொள்வனவு செய்ய ரூபா 05 இலட்சம் தேவையாகவுள்ளது.பொதுமக்களின் தேவை கருதி மனமுவந்து பண உதவி செய்வீர்களாக!(கைக் கெட்டியது வாய் கெட்டாமல் போகவுள்ளது)

பணஉதவி செய்தோர் விபரம்

1

2357
…………………………………………………………………………………..
தொடர்பு T.P 0772964178 (தலைவர்); செ.சிவஞானசுந்தரம்
தொடர்பு கிராமசேவையாளர் J/270 நீர்வேலி மேற்கு
திரு.எஸ்.சண்முகவடிவேல் T.P 0779050335
மக்கள்வங்கி- சுன்னாகம் – 109-2-001-5-0058468

0 Comments

Leave A Reply