10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் சமூக அபி விருத்திக் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது

நீர்வேலி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் சமூக அபி விருத்திக் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.வலி.கிழக்கு பிரதேச சபை தனது எல்லைப் பரப்பில் செய் யப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமாக மக் களின் பங்கேற்புடன் செயற்றிட் டத்தின் முன்மொழிவுகளைப் பெற்று வருகின்றது.அந்த வகையில் நீர்வேலி வடக்கு கிராம அலுவலர் பிரிவுக்கான சமூக அபிவிருத்திக் குழு கடந்த சனிக்கிழமை நீர்வேலி றோ.க.த.க. பாடசாலை மண்டபத்தில் தெரிவு செய்யப்பட்டது. இதில் தலைவராக த.பரராச சிங்கம், உப தலைவராக சு.சுப்பிரமணியம், செயலாளராக வே.மகேந்திரன்மேலும் நால்வர் கொண்ட குழு தெரிவு செய்யப் பட்டது.பிரதேச சபைத் தலைவர் க.துரைசிங்கம், நீர்வேலி உப அலுவலக பொறுப்பதிகாரி சி.தவ ராசா சமூக அபிவிருத்திக்குழு உத்தியோகத்தர் சி.தவநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர். (நன்றி -நீர்வேலி வடக்கு செய்தியாளர். நீருஜன் செல்வநாயகம்.)

0 Comments