10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உதவி

நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் அண்மையில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கனடாவைில் வதியும் ந.நிர்மலன் அவர்கள் 10 000 ரூபாவினை அன்பளிப்புச் செய்துள்ளார். வருடாவருடம் எத்தனை மாணவர்கள் சித்தியடைகிறார்களோ அனைவருக்கும் தலா 10 000 வீதம் ஆசிரியர் தினத்தின் போது  வழங்கிவருகிறார். பண்டிதர் நீ.சி.முருகேசு அவர்களின் ஞாபகார்த்த நிதியில் இருந்து 5000 ரூபாவினை மேற்படி பாடசாலையில் சித்தியடைந்த மாணவர் ஒருவருக்கு பண்டிதர் நீ.சி.முருகேசு அவர்களின் குடும்பத்தவரான வைத்தியர் ஞானகாந்தன் வழங்கியுள்ளார். மேலும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 15 மாணவர்களுக்கு  நீர்வேலி வடக்கு அருணா கடை  உரிமையாளர் திரு.செ.முருகையா  அவர்கள்  பரிசில்களை வழங்கினார். (செய்தி-பாடசாலை அதிபர்)

0 Comments