10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி வடக்கு றோ.க.த.க வில் நடைபெற்ற கால்கோள் விழா

1

ஒவ்வொருவருடமும் ஆரம்பப்பிரிவு உள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களை பாடசாலைக்கு வரவேற்கும் நிகழ்வான கால்கோள் விழா  நடைபெறுவது வழக்கம்.எமது நீர்வேலியிலும் எல்லாப்பாடசாலைகளிலும் கால்கோள் விழா17.01.2013 இன்று கொண்டாடப்பட்டது.நீர்வேலி வடக்கு றோ.க.த.க வில் நடைபெற்ற கால்கோள் விழா தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.இங்கு அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்  யாழ் கல்வி வலயத்தை சேர்ந்த பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு.சு.சற்குணராஜா அவர்களும் ஆரம்பக் கல்வி முதன்மை ஆசிரியர் திருமதி ரொறிங்டன் அவர்களும் கதிர்காம கோவில் பிரதமகுருக்கள் தியாகராஜசர்மா அவர்களும் பரலோகமாதா கோவில் பங்குத்தந்தை  யூட் நிக்சன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.அத்துடன் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

IMG_1063

6

7

8

13

IMG_1126

0 Comments

Leave A Reply