10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் கால்கோள்விழா 2014

நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் இந்த ஆண்டுக்கான கால்கோள்விழா எதிர்வரும் 17.01.2014 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.திரு.சி.தர்மரத்தினம் தலைமை தாங்கும் இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக திரு.சு.சற்குணராசா (கோட்டக்கல்விப்பணிப்பாளர் )அவர்களும் திருமதி செல்வதயாளன் அவர்கள் (ஆரம்பக்கல்வி முதன்மை ஆசிரியர்-யாழ்வலயம்) அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.ப.தர்மரூபன் (இலண்டன்)அவர்களும் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.ஆசியுரை வழங்குவதற்கு பிரம்மஸ்ரீ தியாகராஜக்குருக்களும் அருட்தந்தை யூட் நிக்சன் (பங்குத்தந்தை பரலோகமாதா ஆலயம்) வருகைதரவுள்ளனர்.இந்நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave A Reply