10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி வில்லுமதவடியில் விபத்து..

நெல்லியடியில் இருந்து யாழ்.நோக்கி சென்றுகொண்டிருந்த கார் நீர்வேலி வில்லுமதவடியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஆயர்வேத பெண் வைத்தியர் காயமடைந்து யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 3.30 மணியளவில் நெல்லியடியில் இருந்து ஆயுர்வேத வைத்தியரும் அவருடன் பணியாற்றும் மற்றுமொரு பெண் வைத்தியரும் யாழ்ப்பாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நோக்கி சென்றுகொண்டிருந்த வேளை நீர்வேலி வில்லுமதவடியில் (முன்னர் இராணுவ முகாம் இருந்த பகுதி) நாயொன்று வீதிக்கு குறுக்கே திடீரென பாய்ந்த நிலையில் காரினை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வீதியை விட்டு விலகி பஸ்தரிப்பிட கம்பத்தில் மோதி அருகில் இருந்த காணிக்குள் பாய்ந்து கவிழ்ந்தது.இச்சம்பவத்தில் காரை செலுத்தி வந்த வைத்தியர் தெய்வாதீனமாக உயிர்தப்பினார். பின் இருக்கையில் இருந்து பயணித்த பெண்ணொருவருக்கு தலையில் காயமடைந்துள்ளார். உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளதுடன். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்

12208716_1454252354602356_377095013095581015_n12208712_1454252521269006_2447245809731767430_n12190099_1454252451269013_5619778030562130426_n11219089_1454252524602339_1648460051428951786_n11057757_1454252514602340_6721428633390398255_n

0 Comments

Leave A Reply