10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி வீதிகள் பெரும்பாலானவை இரவு நேரங்களில் வெளிச்சத்தில்[:]

[:ta]

வலி கிழக்கு பிரதேச சபையில் நீர்வேலியைச் சேர்ந்த மூவர் அங்கத்துவம் வகிக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் பிரதேச சபை நிதியில் 13 மின் விளக்குகளை தங்களுடைய பிரதேசங்களில் மிக முக்கியமான இடங்களில் பொருத்துவதற்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் தெரிவு செய்த இடங்களில் மின் விளக்குகள் மின்சாரக்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் நீர்வேலியின் பிரதான சந்திகள் வளைவுகள் மற்றும் இருளில் மூழ்கியுள்ள இடங்கள் என 39 மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதனை விட ஒவ் வொரு வீடுகளிலும் தங்களுடைய கேற் உள்ள இடத்தில் தங்களுடைய சொந்த மின்சாரத்தில் மின் விளக்குகள் ஒளிர விடப்பட்டுள்ளன. இவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். வுhசலில் மின் விளக்குகள் பொருத்த வேண்டிய அத்தியாவசியம் இருந்தும் சில வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய வீட்டு மின்சாரம் பாழாகிப்போகும் என்ற காரணத்தில் அவ்வாறு செய்வதில்லை. எனவே உங்ளுடைய நலன் மற்றும் ஊரவர்களின் நலனை கருத்திற் கொண்டு மின் விளக்குகள் அற்ற பிரதேசங்களில் சுயமாக மின் விளக்குகளை பொருத்த முன் வரவேண்டும். இதுவே எமது விருப்பமுமாகும்.

[:]

0 Comments