10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி_கந்தசுவாமி_கோவில் வளைவு திறப்பு விழா [:]

[:ta]நீர்வேலி_கந்தசுவாமி_கோவில் வளைவு திறப்பு விழா இன்று தைப்பூச நாளில் ( 31) காலை 8.00 மணியளவில் ஆலய பரிபாலன சபை தலைவர் த.நடராசா தலைமையில் ஆரம்பமாகி கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களால் வளைவு திறந்துவைக்கப்பட்டது.

வளைவு அமைப்பதற்கான உபசரணையினை நீர்வேலி தெற்கு நாகலிங்கம் சண்முகநாதன் (CTB) குடும்பத்தினர் எற்றிருந்தனர்.

கடந்த ஆண்டு வைகாசி விசாகத்து அன்று வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்று இன்று தை மாதம் தைப்பூச தினத்தன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இராசேந்திர சுவாமிநாதன் குருக்கள், சிவஸ்ரீ ப.சிவானந்தாக் குருக்கள், செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் கலாநிதி ஆறுதிருமுருகன் மற்றும் அப்பகுதி மக்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

வளைவினை அமைத்த சிற்ப கலைஞர்கள் இன்று நிகழ்விற்கு வரமுடியாத காரணத்தினால் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு வேறு நாளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு்ளது…

[:]

0 Comments