10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வைக்கந்தனுக்கு நாளை கொடியேற்றம்…[:]

[:ta]

நீர்வைக்கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவம் நாளை காலை 11.00 மணியளவில்   கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. கடந்த அண்டு கும்பாபிடேகம் காரணமாக திருவிழா நடைபெறாததால் இந்த ஆண்டு நீர்வேலி பக்தர்கள் மத்தியில் அதிக ஈடுபாடு காணப்படுகிறது. ஆயினும் சூரியன் தற்போது இலங்கை நாட்டின் மீது உச்சம் கொடுத்திருப்பதனால் அதிக வெப்பம் பகல் வேளையில் காணப்படுகிறது. அப்படி இருந்தும் பக்தர்கள் நீர்வைக்கந்தனின் அருளைப்பெற தங்கள் உயர்ந்த பட்ச பக்தி பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தவண்ணம் உள்ளனர். அனைவருக்கும் நீர்வைக்கந்தனின் அருள் கிடைக்கவேண்டும்.

[:]

0 Comments

Leave A Reply