10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வைக்கந்தனைப்போற்றுகிறோம் வணங்குகிறோம்- நீர்வேலி நலன்புரிச்சங்கங்கள்

539045_554384224606175_712215953_nஈழத்திருநாட்டின் இருதயமாக விளங்குவது யாழ்ப்பாணம். இப்புண்ணியபூண்ணிய பூமியில் இற்றைக்கு இருநூற்றி ஜம்பது ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அற்புதமான திருக்கோவில் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி கோயில். தமிழர்பண்பாட்டில் முருகவழிபாடு என்பது தனித்துவமானது. மிக நீண்ட வரலாறு கொண்டது. பழம் பெரும் கிராமமாகிய நீர்வேலிக்கிராமம் முற்றுமுழுதாக முருகவழிபாட்டுக்கு முதன்மை கொடுத்த கிராமம். இக்கிராமத்தில் சைவசமயத்தவரைத் தவிர்ந்த பிற மதத்தவர்களுக்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலை பாரம்பரியமாகக் காணப்பட்டது.புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்தாலும் எம்பெருமானை மறவோம்.

தேரேறிவரும் கந்தனே உன்பாதம் போற்றுகிறோம்………………..

2

நீர்வையம்பதியின் தென்திசையில் கடம்பமரச் சூழலில் அழகொளிரும் ராஜகோபுரத்துடன் அருள் பாலித்துக்கொண்டிருக்கின்றான் எம் நீர்வைக்கந்தன். சித்திரையில் மஹோற்சவம் காண்கின்ற எம்பெருமானின் காணுதற்கரிய காட்சிகளை புகைப்படங்கள் வாயிலாகவும், காணொளிகள் வாயிலாகவும் இணையதளங்களிலும், முகநூல்களிலும் பதிவேற்றம் செய்து எமக்கு அளித்து வருகின்ற அடியவர்களுக்கு எம் இதயபூர்வமான நன்றிகளை உரித்தாக்கி இன்றைய நாளில் முப்பெரும் தேரேறி பவனிவருகின்ற அரும்பெரும் காட்சியை காணக்கிடைக்கின்ற அனைவரும் பெரும்பாக்கியசாலிகளே. இக்காட்சிகளை காணக்கிடைக்காத அனைவருக்கும் கந்தனின் அருட்கடாட்சம் கிட்ட எம்பெருமானை வேண்டுகின்றேன்.

 

ஜீவா கோபாலசிங்கம்

தலைவர்

நீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா.

…………………………………………………………………………………………………………………….

1 நீர்வைக்கந்தன் என்று அன்பாக எல்லோராலும் அழைக்கப்படும் எமது முருகன் இன்று தேரேறி வீதிவலம் வந்து பக்தர்களுக்கெல்லாம் அருள்தருவான்.இந்த நிகழ்வு வருடா வருடம் நூற்றாண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் முக்கியமானதொரு மகிழ்ச்சிகரமான பக்திகரமான நிகழ்வு ஆகும்.இந்நாளில் அந்தணர்கள் வேதங்கள் ஓத பக்தர்கள் முருகனை பலவிதமாக அழைத்து வழிபட பஜனைகள் பாட மேளதாளங்கள் ஒலிக்க முருகன் வீதியுலா வருவது கண்கொள்ளாக்காட்சியாகும்.இப்படியொரு திருவிழாவை எமதூரும் அயல் ஊரவரும் நடாத்திக்கொண்டிருப்பது ஒரு மறக்கமுடியாதவொரு விழாவாகும்.எமதூரவர்கள் அயல் ஊரவர்கள் அனைவரும் இந்நன்நாளில் முருகனின் அருள்பெற்று தமது வாழ்வில் எல்லாப்பயன்களும் அடையவேண்டி பிரார்த்திக்கின்றேன்

நன்றி

திரு.திருவாசகம்

தலைவர்

நீர்வேலி நலன்புரிச்சங்கம்

இலண்டன்.

……………………………………………………………………………………………..

நீர்வைக்கந்தனை வாழ்த்தி வணங்குகிறேன்……

marakkஎமது ஊர் பண்பாடு கலாச்சாரம் ஆன்மீகம் நிறைந்த ஊர் ஆகும்.இன்று 24.04.2013  எம்பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் தேரேறி வரும் காட்சியினை காண பல்லாயிரம் கண்கள் வேண்டும்.இத்தேர்த்திருவிழாவில் எம் ஊரவர்கள் பகைமறந்து ஒற்றுமையுடன் தேரின் வடம் பிடித்து மயிலேறி வரும் கந்தனின் எல்லாம் வல்ல திருவருளை எல்லோரும் பெற்று சகல வளங்ளுடன் வாழ நீர்வேலி புலம் பெயர்வாழ் மக்கள் சார்பில் எமது கந்தனை பிரார்த்திக்கின்றேன்.

                                                                                                நன்றி

சுபேஸ்குமார் செல்வரத்தினம்

பொருளாளர்

நீர்வேலி நலன்புரிச்சங்கம்

இலண்டன்

 

0 Comments

Leave A Reply