10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

சொல்வேந்தர் ஆறுதிருமுருகன் அவர்கள் நீர்வைக்கந்தனை போற்றி வழங்கிய வாழ்த்துரை

13082012pokishamLஅருள்ச்சிறப்பும் திருவருள் பெருமையும் நிறைந்த நீர்வைக்கந்தப் பெருமான் தேரேறிவரும்  திருநாள்  குறித்து வாழ்த்துவதில் ஆனந்தமடைகின்றேன்.பழம்பெரும் திருக்கோவிலாகிய நீர்வைக்கந்தன் ஆலயத்தின் சிறப்பு போற்றுதலுக்குரியது. கந்தபுராணத்திற்கு உன்னத மதிப்புக்கொடுத்த இவ்வாலயம் அப்பாரம்பரிய நெறியில் நின்று பெருமைபெற்றது.அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சிவ ஸ்ரீ இராஜேந்திரக்குருக்கள் அவர்கள் பிரதமகுருவாக விளங்கி இத்திருக்கோவிலை ஆற்றுப்படுத்தினார்.இன்று அவரது ஏக புதல்வன் சிவஸ்ரீ சுவாமிநாதக்குருக்கள் அவர்கள்  தந்தையின் வழியில் பிரதம குருவாக  விளங்கி கோவில் கிரிகைகளை வழிநடத்துகிறார். இவ் ஆலயத்தை காலத்துக்கு காலம் பரிபாலனம்  செய்த பரிபாலனசபையினர்  மிகவும்  புனிதமாக  பேணிக்காத்து வருகின்றனர்.யாழ் குடாநாட்டில் மிகஅற்புதமான நாகபட பந்தல் அமைத்து  திருவிழா செய்த திருக்கோவில் என்ற பெருமை இக் கோவிலை சாரும்.இக் கோவில் திருவிழாவைக்காண்பதற்கு  பல ஊர் மக்கள் நீர்வேலி நோக்கி   வரும்
வழக்கங்கள் இருந்தது.பண்டிதர்கள் பாவலர்கள் வித்துவான்கள் என பலர் நீர்வைக்கந்தன் ஆலயத்தில் புராணப்படிப்பு சமயப்பிரசங்கம் சிவதீட்சை போன்ற நெறிமறைகளை காத்தனர்.இப்புண்ணிய திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப்பெருமான் யாழ் குடாநாட்டில் உள்ள மிகப்பெரிய விக்கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.நீர்வைக்கந்தனின் திருநாமம் போற்றி என் வாழ்த்தினை சமர்ப்பிக்கின்றேன்.

                                                                                                 வேலுண்டு பயமில்லை

அன்புடன்

திரு.ஆறுதிருமுருகன்

தலைவர்

துர்க்காதேவி தேவஸ்தானம்

0 Comments

Leave A Reply