10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வைக்கந்தன் இளைஞர்களை பாராட்டுங்கள்

நீர்வைக்கந்தன் ஆலயத்தின் பெருந்திருவிழா பலத்த  கொரணா தொடர்பான சிக்கல்களுக்கு  மத்தியில்  முருகனின் திருவருளால் சிறப்பாக நடைபெற்று இன்றுடன் வெற்றிகரமாக நிறைவுக்கு வருகின்றது. இதற்கு பலருடைய ஒத்துழைப்புக்கள் காரணமாக இருக்கின்றன. ஆனாலும் நீர்வைக்கந்தன் இளைஞர்கள் மின்குமிழ்களால் ஆலயச் சுற்றாடலை அழகுபடுத்திய விதம் அனைவரையும் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன்னுள்ள வருடங்களில் செய்தவற்றை விட இந்த ஆண்டு திருவிழாவினையொட்டி இளைஞர்கள் மேற்கொண்ட மின்குமிழ் அலங்கரிப்பு பிரமிக்க வைக்கின்றது. இந்த சேவையில் ஈடுபட்ட அனைத்து இளைஞர்களையும் வாழ்த்துவதுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். எங்கள் நீர்வேலி தொடர்பாக ஏனைய ஊரவர்களின் பார்வையில் நீர்வைக்கந்தனின் திருவிழா தொடர்பாக உயர்ந்த மரியாதையினை ஏற்படுத்தியிருக்கும் என்பது உறுதி.

0 Comments

Leave A Reply