10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வைக்கந்தன் தேரேறும் நாளில் ஊர்கூடி தேர்இழுப்போம்……தேர்த்திருவிழாவிற்கான சிறப்புப்பக்கம்

ssssadadadaஎமதூரின் சிறப்பையும் வனப்பையும் அதிகரிக்கும் அழகை கொண்டுள்ள நீர்வைக்கந்தன் நீர்வேலியின் பிரதான நுழைவாயிலாக அமைந்துள்ளான்.எல்லோர் மனங்களிலும் ஆழமாக அமர்ந்து அவர்களுக்கு அருளாட்சி செய்து வரும் எம்பெருமானுக்கு தேர்த்திருவிழா.இந்நன்நாளில் நீர்வைக்கந்தனை வணங்கி எல்லா மக்களும் எல்லா நலனும் பெறவேண்டும் என்றும் ஒற்றுமையுடன் அனைவரும் இணைந்து வடம்பிடிப்போமாக.

-நீர்வேலி இணையம்

தமிழ்க்கடவுள் தேரேறி வருகின்றார்

முருகன் தமிழ்க்கடவுள். ‘மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன்” என்து அருணகிரியாரது திருவாக்கு. தமிழை வாழவைக்கும் தெய்வமாக விளங்கும் கடம்பவனப் பெருமாள் இன்று ஆறுமுகக் கடவுளாகத் தேரேறி வருகின்றான்.

தேர் என்பது வாழ்க்கையைத் தேர் என்ற எண்ணத்தையும் உருவாக்குகின்றது. நாம் செய்யும் நல்வினை தீவினை குறித்துச் சிந்திக்க, அசைபோட வாய்ப்பினை நல்குகின்றது. எமது இதய பீடத்தில் முருகப் பெருமான் வீற்றிருக்கும் போது எமது வாழ்க்கைத் தேர் சுமுகமாக ஓடும். அதற்குரிய வழிவகைகளை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனத்தை இறைவன்பாற் செலுத்தலும் இறைபுகழைப் பேசலும் இதற்கான அடிப்படைகளாக அமையும்.

நீர்வைக் கிராமத்தின் பெயரைச் சுட்டியவுடன் நம்மனக்கண்முன் தோன்றும் தமிழறிஞர்கள் நீர்வைக் கந்தசுவாமியின் திருவருளால் எழுச்சி பெற்றவர்கள். அறிஞர் கி.வா.ஜகந்நாதன் போன்ற பெரியவர்களுடைய தமிழ் விளையாடிய மண் எங்கள் மண். ஆக துய்யமறை போற்றும் திருநீர்வைக் கந்தனை எல்லவரும் போற்றித் துதிப்போம். வாழ்வு வளமுற அமையட்டும்.

lali

 

 

 

செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன்
(நீர்வைக்கிழார்)
விரிவுரையாளர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை.

…………………………………………………………………………………………………………………………………………

Image-(2)

 நீர்வேலி கடம்ப முருகன் அடியவர்களுக்கு தீவினைகளை அழித்து நல்லருள் பாலிக்க நாளை தேரேறி உலா வருகிறார். அவரின் அருளைப் பெற 24.04.2013 புதன்கிழமை நாமெல்லாம் ஆலயத்தில் ஒன்று கூடி வடம் பிடித்து தேர் இழுப்போம்.

திரு இ.குணநாதன்
பிரதிக் கல்விப் பணிப்பாளர்
நீர்வேலி மத்தி.

 

……………………………………………………………………………………………………………………………………………

paththuகந்தபுராண கலாச்சாரத்தை கொண்ட நீர்வேலி கிராமத்தின் பிரசித்திபெற்ற நீர்வேலி கந்தசாமி கோவிலின் தேர்த்திருவிழாவின் போது முருகன் தேரேறி அருள்பாலிக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.மருகன் அடியார்கள் வடம்பிடித்து முருகனின் அருள்பெற அயலூர்களில் இருந்தும் பிறநாடுகளில் இருந்தும் வருகைதருவது சிறப்பான அம்சமாகும்.எல்லாம் வல்ல முருகப்பெருமான் தேரில் ஆரோகணித்து மக்கள்களின் இன்னல்கள் நீக்கி வளமான வாழ்வு பெறவும் சாந்தி சமாதானம் நிலைக்கவும் அருள்புரிவாராக.

                                                                        -அதிபர் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி

…………………………………………………………………………………………………………………………………………………

0 Comments

Leave A Reply