10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வைக்கிராமத்தின் வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தும் இணையம்

nnnஐந்தாவது ஆண்டில் காலடி பதிக்கும் எங்கள் நியூ நீர்வேலி இணையத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றேன். கடந்த நான்கு  ஆண்டுகளாக நீர்வேலி மண்ணின் செய்திகளை குறிப்பாக கல்வி சார்ந்த கலைக்கூடங்களினது   செய்திகளையும்  கோவில்களினது விழாக்களினையும் செய்திகளையும் புலம் பெயர்நாடுகளில் வதியும்  நீர்வை உறவுகளின் செய்திகளையும் உடனுக்குடன் புகைப்படங்கள் மற்றும் காணொளி மூலமும் அறிந்து கொள்ளும் பாலமாக இவ் இணையம் செயற்பட்டு வருவதுடன் நீர்வேலியின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாகவும் அமைகின்றது என கூறுவது மிகையாகாது.இந்த வகையில் நீர்வேலியின் வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறும் இவ் இணையம் மேலும் வளர்ச்சியடையவும் அதன் இயக்குநர் இந்த இணையத்தினை மேலும் சிறப்பாக இயக்குவதற்கும் எனது  நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றேன்.

திரு.செ.பத்மநாதன்

தலைவர்

பாலர்பகல்விடுதியும் முன்பள்ளியும்

நீர்வேலி

0 Comments

Leave A Reply