10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

சீராளர் பேரில் உருவான அரங்கில் நிகழும் நிகழ்வு சிறப்புறட்டும்…

1601021_724332830917803_1272022918_nநீர்வேலி நலன்புரிச்சங்கம்- கனடா அமைப்பு வழமை போல, வாழையடி வாழை என்ற நிகழ்வை சிறப்புற நடாத்துவது அறிந்து மகிழ்ச்சியடைகின்றோம்.. நீர்வேலியின் புகழ் உலகெங்கும் பரவும் வண்ணமும் நீர்வேலி சார்ந்த நற்பணிகள் விரிவுறும் வண்ணமும் இந்த நிகழ்வு இடம்பெறுவது பெருமையளிக்கின்றது. அதுவும் சைவத்தமிழ் அறிஞர்களுள் தலை சிறந்தவராக உலகு கொண்டாடும் ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர பண்டிதரின் திருநாமத்தில் அமைந்த அரங்கில் இடம்பெறுவது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது… இப்பண்டிதர் எமது ஊரின் முக்கிய பெருமகனாராக விளங்கிய போதும், எவரிடமும் இவர் பதிப்பித்த, எழுதிய நூல்களைக் காண்பது அரிதாகி விட்டது. அன்னாரின் திருவுருவப் படம் கூட எவரிடமும் இருப்பதாக அறிய முடியவில்லை.இவ்வாறான சூழலில் கனடா வாழ் நம்மவர்கள் சிவசங்கரனாருக்குச் சிறப்புச் செய்யும் முகமாக அவர் பெயரில் அரங்கு அமைத்து விழா நடாத்துவது மிகுந்த உன்னதமான நிகழ்வாகும்..எல்லாம் வல்ல இறைவனின் பேரருட் பெருங்கருணையால் இந்நிகழ்வு மேன்மேலும் சிறப்படைய பிரார்த்தனை செய்து வாழ்த்துகின்றோம்… இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் யாவருக்கும் எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரியதாகட்டும்…
அன்பின்,
தியாராஜக்குருக்கள் மயூரகிரி சர்மா
நீர்வேலி

0 Comments