10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வை மக்களின் உறவை பலப்படுத்தும் இணையம்

fffff

நீர்வேலியை தாயகமாக கொண்ட மக்கள் யாவரையும் இணைக்கும் இணையற்ற தளமாக மிளிர்வது நியூ நீர்வேலி இணையம்.
செய்திகளை பகிர்வது, காணொளிகள் மற்றும் படங்கள் வாயிலாக நம்மவர்களை நீர்வையோடு இணைத்து வைப்பது என்று இத்தளம் அரிய பணிகளை செய்கிறது.
ஊரிலே வாழ்கிற நாங்கள் கூட சில நிகழ்வுகளை இந்த இணையம் மூலம் தான் தெரிந்து கொள்கிற போது, புலம்பெயர்ந்த உறவுகளுக்கு இந்த இணையம் எவ்வளவு பயன்படும் என்று சொல்ல வேண்டியதில்லை.

ஆக பற்பல வகையிலும் நம் ஊர் செய்திகளை பரவலுறச் செய்யும் மின்னூடகமான இந்த இணையம் நான்காவது ஆண்டை நிறைவு செய்வது பெருமைக்குரியது.
இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து இதனை இயக்கும் ஆசிரியர் சசிகுமார் அவர்களின் பெருமுயற்சி பாராட்டுக்குரியது.
எல்லாம் வல்ல இறைவன் அருளால் இத்தளம் மேன்மேலும் பொலிவு பெறவும் நீர்வை மண்ணின் உறவுகளுக்கு பெரிதும் பயனுடையதாக அமையவும் செல்லக்கதிர்காம செவ்வேளை பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம்.
பிரம்மஸ்ரீ கு.தியாகராஜக்குருக்கள் ( நீர்வை மணி ஐயா)
பிரம்மஸ்ரீ தியாக. மயூரகிரிக்குருக்கள்

0 Comments

Leave A Reply