10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]நீா்வேலி அரசகேசரிப் பிள்ளையாரின் தோ் 50ஆவது வீதியுலா[:]

[:ta]நீா்வேலி அரசகேசரிப் பிள்ளையாரின் சித்திரத்தேரின் ஐம்பதாவது வீதியுலா 05.09.2017 காலை நடைபெறவுள்ளது.
.
இலங்கையின் தோ்ச்சிற்ப வரலாற்றில் பெருமை மிக்க தேராக நீா்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவில் தோ் விளங்குகின்றது. இது தமிழகம் திருவாரூரைச் சோ்ந்த சண்முகம்பிள்ளை ஏகாம்பரத்தால் நி ர்மாணிக்கப்பட்ட சிறப்பிற்குரியதாகும்.
.
ஏகாம்பரம் – மாவிட்டபுரம் கந்தசுவாமியின் தோ் பொன்னாலை வரதராஜப் பெருமாள் தோ், மற்றும் நயினாதீவு நாகபூசணி அம்பாளின் தேரில் உள்ள சிற்பங்கள் என்பவற்றை உருவாக்கிப் புகழ் பெற்றவா்.
.
ஏகாம்பரம் ஸ்தபதியால் அரசகேசரிப் பிள்ளையாருக்கென உருவாக்கப்பட்ட சித்திரத்தோ் 1967 ஆம் ஆண்டு செப்ரெம்பா் மாதம் 08 ஆம் திகதி வெள்ளோட்டம் விடப்பட்டது.
.
இந்தத் தோின் உருவாக்கத்திற்கு அப்போது தொழிலதிபா் க.வெ.கனகரத்தினம் அவா்கள் பொருளாளராக இருந்து தோ்த்திருப்பணியை முன்னின்று நடத்தினார். ஏறத்தாழ அப்போதைய மதிப்பில் ஒரு லட்சம் ரூபா மதிப்பில் செய்யப்பட்ட அந்தத் தேருக்கென ரூபா 50100 இனை அமரா் கா. செல்லையா வழங்கியிருந்தார். (அமரா் செல்லையா எனது தாய் வழி உறவினா் என்பது மேலதிகத் தகவல்)
.
அரசகேசரிப் பிள்ளையாரின் தோ் திராவிடம் எனப்படும் எண்கோண மரபில் அமைந்தது. ஏழு தளங்களைக் கொண்டுள்ளது.

தேரின் பேரூா் மட்டத்தில் ஆலய வரலாற்றைப் புடைப்புச் சிற்பங்களாகச் சிற்பி செதுக்கியுள்ளார். ஆலய வரலாற்றைத் தேரில் சிற்பங்களாக செதுக்கும் மரபை ஏகாம்பரமே ஏற்படுத்தியதாகக் கூறுகின்றனா்.
.
அரசகேசரியின் கனவில் விநாயகா் தென்பட்டமையும் தான் நீா்வேலியில் இருக்கின்றமையும் அரசகேசரி விநாயகரைத் தரிசித்து புதிதாக ஆலயம் அமைத்து வழிபடுகின்றமையும் இங்கு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
.
அரசகேசரி விநாயகரின் தோ்த்திறனை உள்வாங்கி வேலுப்பிள்ளை அம்பிகைபாகன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்திற்காக ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

நீர்வைக்கிழாா்

[:]

0 Comments

Leave A Reply