10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]பன்னாலை வீதி புனரமைப்பு ….[:]

[:ta]நீர்வேலி வடக்கு சிறுப்பிட்டி கிழக்கு பன்னாலை இணைப்பு வீதி நீண்டகாலத்தின் பின் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி 525 மீற்றர் நீளமான வீதி வலி.கிழக்கு பிரதேச சபையால் புனரமைக்கும் பணிகள் கடந்த வாரம் தொடக்கம் துரிதகதியில் இடம்பெற்றுவருகின்றன.

இவ் வீதி குன்றும் குழியுமாக காணப்பட்டதுடன் பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், தொழிபுரிவோர் என பலர் மழை காலங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால் பயணிக்க முடியாது பல சிரமங்களுக்குள்ளாகியதுடன் வலி.கிழக்கு பிரதேச சபைக்கு கடிதங்களும் சமர்ப்பித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இவ் வீதி முழுமையாக புனரமைப்பு செய்யப்படுகிறது. குழிகள் பள்ளங்கள் இருந்தபகுதிகள் இடிபாடு போட்டு உயர்த்தி மேல் கருங்கல் போட்டு தார் வீதியாக புனரமைப்பு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.(நன்றி- செ.நிரூஜன்)

[:]

0 Comments