பழைய அதிபர் அலுவலக புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்
நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் கிளையினரின் நிதியுதவியில் அத்தியார் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் அலுவலகத்தின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.1.6 மில்லியன் ரூபா (16 இலட்சம்) செலவில் புனரமைத்துக் கட்டப்படும் இவ் அலுவலகம் பழைய கட்டிடத்தின் அழகும் தன்மையும் மாறாத வகையில் புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து பாவனையில் இல்லாதிருந்தது.தற்போது நீண்ட காலத்தின் பின் புனரமைக்கப்படும் வாய்ப்பு கிடைத்துள்ளது.மிக மோசமாக பழுதடைந்துள்ள இக்கட்டிடம் எமது ஊரைச்சேர்ந்த இலண்டனில் வதியும் புலம்பெயர் நீர்வேலி அன்பர்களின் அன்பளிப்பில் புனரமைக்கப்படுகிறது.வெளிநாடுகளில் வசித்தாலும் நீர்வேலியின் கல்வி வளர்ச்சியிலும் பாடசாலைகளின் வளர்ச்சியிலும் அக்கறையுள்ள எமது உறவுகள் எல்லோரும் பாராட்டப்படவேண்டியவர்கள். அந்த வகையில் நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் கிளையினரும் பாராட்டுக்குரியவர்கள்.
What a building! Just looking at these pictures brings many fond memories to my mind. I still remember my first day at school, Mr P K Rajaratnam was our Principal, a strict but a wonderful person, one of the best Principals that this school has had. It is important that this building is refurbished carefully without losing its original appearence and charecter.
நிச்சயமாக.பழமையையும் அதன் நன்மதிப்பையும் பேணுவதில் நீர்வேலியைச்சேர்ந்தவர்களும் எமது அதிபரும் உழைத்துவருகின்றனர்
Thank you.