10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கரந்தன்

வரலாறு

யா /கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் சுருக்கமான ஒரு பார்வை

 இப்பாடசாலை நீர்வேலிக் கிராமத்தில் கரந்தன் சந்தியில் இராசவீதியின் கிழக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. இப்பாடசாலை அமைந்துள்ள காணியை திருமதி அன்னபூரணம் இராமுப்பிள்ளை அவர்கள் அன்பளிப்பாக வழங்கியமையால் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் என்று அழைக்கப் படுகின்றது.

 இப்பாடசாலை 08.01.1979 இல் 20 மாணவர்களுடனும் 1 ஆசிரியருடனும் ஆரம்பிக்கப் பட்டது. இப்பாடசாலையின் ஆரம்ப நாமம் கரந்தன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்பதாகும். இபப்hடசாலையின் முதல் அதிபராக திரு.ம.க.நடராஜா அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

 1979.03.30 இல் பெற்றார் ஆசிரியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலைக்கென 15.11.1978 இல் அத்திபாரமிடப்பட்ட 20’ x 60’ அளவுடைய முதலாவது நிரந்தரக் கட்டடம் 20.06.1979 இல் பாவனைக்கு திறந்துவிடப்பட்டது.

vakk

 திரு.ம.க.நடராஜா அவர்கள் 28.06.1979 இல் ஓய்வு பெற்றுச் செல்ல, அப்போது ஆசிரியராகக் கடமையாற்றிய திரு கு.சண்முகநாதன் அவர்கள் பாடசாலையின் பதில் அதிபராக பொறுப்பேற்று 26.09.1979 வரை சேவையாற்றினார்கள்.

 27.09.1979 இல் திரு.செ.நமசிவாயம் அவர்கள் பாடசாலையின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டார்கள்.

 08.10.1981 விஜயதசமி அன்று பாடசாலையின் பெயர் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது

 பாடசாலைக்கென திருமதி அன்னபூரணம் இராமுப்பிள்ளை அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணி 23.09.1982 அன்று பாடசாலையின் ஆட்சியுரிமையாக்கப்படது

 1983 இல் மாணவர்களுக்கு குடிநீர் தேவை கருதி கிணறு அமைக்கப்பட்டது

 திரு. செ.நமசிவாயம் அவர்கள் 12.07.1985 இல் ஓய்வு பெற்றுச் செல்ல பாடசாலையின் உப அதிபராக இருந்த திரு. கு. சண்முகநாதன் அவர்கள் பாடசாலையின் அதிபராக 13.07.1985 இல் நியமிக்கபப்ட்டார்கள்.

 தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை வகுப்புக்கள் நடைபெற்றுவந்த இப்பாடசாலையில் 1986 இல் தரம் 6 உம், 1987 இல் தரம் 7 உம், 1988 இல் தரம் 8 உம் 2003 இல் தரம் 9 உம் ஆரம்பிக்கப்பட்டது

 1986 இல் மேலும் ஒரு 20’ x 60’ அளவுடைய புதிய கட்டடம் அமைக்கப்பட்டது. அத்தோடு 1986 இல் பாடசாலையின் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டியும் நடாத்தப்பட்டது.

 திரு கு.சண்முகநாதன் அவர்கள் 31.01.1990 இல் ஓய்வுபெற்றுச் செல்ல ஆசிரியராகவிருந்த திருமதி.பூ. கந்தசாமி அவர்கள் 01.02.1990 தொடக்கம் 14.02.1990 வரை பதில் அதிபராகக் கடமையாற்றினார்கள்;. திரு.கு. பூபாலசிங்கம் அவர்கள் 15.02.1990 இல் அதிபராக் கடமையேற்று 28.02.1990 வரையான காலப்பகுதியில் கடமையாற்றினார்கள். தொடர்ந்து ஆசிரியை திருமதி பூ கந்தசாமி அவர்கள் பதில் அதிபராக 01.03.1990 தொடக்கம் 13.03.1990 வரை கடமையாற்றினார்கள்.

 14.03.1990 இல் புதிய அதிபராக திரு.செ.வினாயகமூர்த்தி அவர்கள் பாடசாலையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள்.

 15.03.1999 இல் தெற்குப்புறமாக 2 பரப்பு 15 குளி புதிய காணி கொள்வனவு செய்யப்பட்டது. இக் கொள்வனவுக்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பெற்றோரிடமிருந்தும் நலன்விரும்பிகளிடமிரு;நதும் பணத்தைச் சேகரித்திருந்தது.

 25.10.2000 இல் திருமதி அன்னபூரணம் இராமுப்பிள்ளை அவர்கள் மேலும் 2 பரப்பு 9 குளி மற்றும் 1 பரப்பு 2.75 குளி ஆகிய இரு காணிகளை பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கினார்கள்.

 பாடசாலையின் தெற்குப் புறமாக 25’ x 50’ கொண்ட மாடிக்கட்டடத்தின் கீழ்த்தளம் பூர்திதி செய்யப்பட்டு 2001.01.29 அன்று புதிய இரு வகுப்பறைகள் திறக்கப்பட்டன.

 திரு.செ.வினாயகமூர்த்தி அவர்கள் 31.05.2001 இல் ஓய்வு பெற்றுச் செல்ல திரு.சீ.சிவநேசன் அவர்கள் 01.06.2001 இல் பாடசாலையின் அதிபர் பதவியினை ஏற்றுக் கொண்டார்கள்.

 பாடசாலைக் காணியில் தெற்குப்புறமாக அமைக்கப்பட்ட மாடிக்கட்டடம் 25’ x 90’ அளவுடைய 8 வகுப்பறைகளைக் கொண்ட மாடிக்கட்டடமாக விஸ்தரிக்கப்பெற்று அது பாவனைக்கு திறந்துவிடப்பட்டது. மாடிக்ககட்டடம் அமைக்கப்பட்டதுடன் பாடசாலையானது புதுப் பொலிவு பெற்று கம்பீரமாக காட்சி தருகின்றது.

 திரு.சீ.சிவநேசன் அவர்கள் 14.11.2007 இல் இடமாற்றம் பெற்றுச் செல்ல 15.11.2007 தொடக்கம் பாடசாலையின் புதிய அதிபராக திரு.கு.வாகீசன் அவர்கள் கடமையினை ஏற்றுக் கொண்டார்கள்.

 பாடசாலையின் தெற்குப்புற வீதியில் பாடசாலைக்கான பிரதான வாயில் அமைக்கப்பெற்று அது பாவனைக்காக 24.01.2008 அன்று திறக்கப்பட்டது.

 21.08.2008 பாடசாலைக்கு கணனி ஒன்றை திரு. கா.சிவபாலன் அன்பளிப்பாக வழங்கினார்கள்

 14.11.2008 பாடசாலைக்கான பெயர் வளைவு திரைநீக்கம் செய்யப்பட்டது

 2008 நவம்பர் மாணவர்களக்கு மதிய உணவு தயாரிப்பதற்கு சமயலறை நிர்மாணிக்கப் பட்டது.

 20.08.2009 மாடிக்கட்டடத்திற்கு பூரண மின் இணைப்பு வழங்கப்பட்டது.

 07.02.2010 திரு சிவனேஸ்வரன் அவர்களால் பாடசாலைக்கு ஒலிபெருக்கிச் சாதனத்தொகுதி வழங்கப்பட்டது

 05.04.2010 கணனி அறை அமைக்கப்பட்டது.

 21.04.2010 பாடசாலைக்குக் கிழக்குப் புறமாக 3 பரப்புக் காணியை திருமதி சிவகாமியம்மா சின்னத்தம்பி அவர்கள் தனது மகன் திரு சின்னத்தம்பி சிவரூபன் அவர்களின் அனுசரணையுடன் அன்பளிப்பாக வழங்கினார்கள்.

 15.08.2010 பாடசாலைக்கு கிழக்குப் புறமாக அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் 50’ x 25’ மாடிக்கட்டத்தின் கீழ்த்தளத்தில் செயற்பாட்டறை நிர்மாணிக்கப்பட்டது.

 29.06.2012 சுவீஸ் நாட்டைச் சேர்ந்த திருமதி சுஜீவா பெனான்டோ அவர்களினால் 3 வகுப்பறைகளும் ஒரு நூலகமும் அமைக்கும் பணி ஆரம்பிக்கப் பட்டது.

 20.08.2012 கனடாவில் வசிக்கும் பழையமாணவன் திரு நடராசா குகேந்திரன் அவர்களால் பிரதானவாயிலில் சரஸ்வதி சிலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப் பட்டது.

 10.12.2012 பாடசாலையில் 25 வருடங்களுக்குப் பின்னர் பரிசளிப்பு விழா நடாத்தப் பட்டது.

 நீர்வேலிப் பிரதேசத்தில் கூடியளவு மாணவர்களை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய வைத்தும், தரம் 9 மாகாணமட்டப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கோட்டமட்டத்தில் முதன்மையாகவும் திகழும் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயமானது இப்பிரதேசத்தில் ஓர் முன்னணி ஆரம்பப் பாடசாலையாகத் திகழ்வதால், இப்பாடசாலையில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு பெற்றோர்கள் ஆர்வத்துடன் செயற்படுகின்றனர்.