10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

றோ.க.த.க

  யா/நீர்வேலிறோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலை

ggggggggggj

 

 

நோக்கக் கூற்று

 மாணவர் ஆற்றல்களையும்,பொருத்தமானகற்றல் வளங்களையும் ஒருங்கிணைத்து உலகசவால்களைஎதிர் கொண்டுஆரம்ப, இடைநிலைக் கல்வியினூடாக சுபிட்சமான  எதிர் காலத்திற்குபிள்ளைகளை இட்டுச் செல்லல்.

பணிக் கூற்று

 எமதுபாடசாலையின் முழு வளர்ச்சிக்குவேண்டியவளங்களைப் பாடசாலைச் சமூகத்தினூடாகஒருங்கிணைத்தல்

 பாடவிதான, இணைப்பாடவிதான  செயற்பாடுகளைத் திட்டமிட்டுத்  தொடர்ச்சியான மேற்பார்வையினூடாக       மாணவர்களின் ஆற்றல்களை  வளர்த்தல்.

 பாடசாலைசார்ந்தசங்கங்கள்,மன்றங்கள் மற்றும் அமைப்புக்களின் மூலம் பாடசாலையின் வளர்ச்சிக்குஉச்சபயனைப் பெற்றுக் கொடுத்தல்

…………………………………………………………………………………………………………………………………………………………………….

J/NEERVELY ROMAN CATHOLIC TAMIL MIXED SCHOOL

TEACHER’S PARTICULERS

No Name & Address Qualifications Service Grade & Subject
1 Mr.Sinnathampy Tharmarathinam G.C.E A/L Trd (BUILDING CONSTANCY) S.L.T.S 2-I TRD (Principal)
2 Mrs.Ganesamalar Sothilingam B.A Dip.in S.L.T.S- I TAMIL
3 Mrs.Tharany Selventhiran B.A Dip.in Trd (MATHS) S.L.T.S 2-II MATHS
4 Mrs.R.Kumarasri B.A  Dip.in S.L.T.S 3-I HISTROY
5 Mrs.Arulmoly Srikanthan G.C.E A/L trd (ENGLISH) S.L.T.S 3-I ENGLISH
6 Mr.Arumugam  Ponvasan G.C.E A/L Trd (SCIENCE) S.L.T.S 2-II SCIENCE
7 Mrs.H.Thujakumaran Trd( MUSIC) S.L.T.S 2-II MUSIC
8 Mrs.Gowsalja Suseenthirarajan B.ADip.in.Edu S.L.T.S 2-II TAMIL
9 Mrs.Mary Arul Rani Thavaseelan G.C.E A/L trd(CHRIST) S.L.T.S 2-II CHRIST
10 Ms.Suthamathysivananthamoorthy G.C.E A/L Trd(PRIMARY) S.L.T.S I-I PRIMARY
11 Mrs.Vasanthy Sathiyanathan G.C.E A/L Trd (PRIMARY) S.L.T.S 2-II PRIMARY
12 Miss.Vasantha Mahenthiran G.C.E A/L Trd (PRIMARY) S.L.T.S 2-II PRIMARY
13 Miss.Seevaratneswary  Sabaratnam G.C.E A/L Trd (PRIMARY) S.L.T.S 2-II PRIMARY
14 Mr.Sinnathamby  Logenthiran G.C.E A/L Trd (PRIMARY) S.L.T.S 3-I PRIMARY

……………………………………………………………………………………………………………………………………………………………..

யா/நீர்வேலிறோமன் கத்தோலிக்கதமிழ்க்கலவன் பாடசாலை

மாணவர் தொகை  2013

பால் ரீதியாக

சமயரீதியாக

வகுப்பு

ஆண்

பெண்

மொத்தம்

ஆண்

பெண்

01

13

17

30

26

4

02

14

13

27

23

4

03

17

16

33

30

3

04

15

16

31

29

2

05

10

18

28

25

3

ஆ.க.மொ

69

80

149

133

16

06

10

12

22

18

4

07

13

11

24

19

5

08

19

13

32

29

3

09

12

13

25

23

2

இ.நி.மொ

54

49

103

89

14

மொத்தம்

123

129

252

222

30

 

 

………………………………………………………………………………………………………………………………………………………………………….

பாடசாலையின் வரலாறு

யாழ் மாவட்டத்திலுள்ளயாழ் வலயத்திலேகோப்பாய்க் கோட்டத்திலே நீர்வேலிஎனும் எழில்மிகுகிராமத்தில் அமைந்திருப்பதுதான் யா/ நீர்வேலிறோ.க.த.கபாடசாலைஆகும். “கற்ககசடற” எனும் மகுடவாசகத்தைதனதாகக் கொண்டேகல்விப் பணியாற்றுகின்றஎமதுபாடசாலையின் வரலாற்றினைஎழுதும் பாக்கியம் கிடைத்தமை மிகவும் சிறப்பானதாகும்.

இக்கிராமத்தில்உள்ளபாடசாலைகளில்காலத்தால்முந்தியபாடசாலைஎன்றசிறப்பைப்பெறுவது

எமதுபாடசாலையேஆகும்யாழ்ப்பாணத்திலேகத்தோலிக்மதம் பரப்பப்பட்டகாலத்திலேகல்விப்பணியினூடாகமதம் பரப்பும் முயற்சிமிசனரிமாரால் மேற்கொள்ளப்பட்டன. அம் முயற்சியின் பயனாகவேஎமதுபாடசாலையும் உதயமாகியது. 1905ம்ஆண்டுஒருஅதிபரினதும் ஒருஆசிரியரினதும் சேவையோடுதரம் 5 வரைவகுப்புக்களைக் கொண்டதாகயாழ் நகர் ஆசனக் கோயில் திருப்பணியாளர் அருட்திருதியோமர் ஆண்டகைஅவர்களின் முயற்சியினால் திரு எஸ். கபிரியேற்பிள்ளைஉபதேசிகரால் இப் பாடசாலைஆரம்பிக்கப்பட்டதாகவரலாறு கூறுகின்றது. ஆரம்பத்திலே இப் பாடசாலைஓலைக் கொட்டிலாகவேஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்திலேகத்தோலிக்கமாணவர்களேகல்விகற்றனர்.

காலச்சக்கரம் சுழல காலமாற்றத்தின் காரணமாகஒருஅதிபர் ஒருஆசிரியர் என்றநிலைமாறிபலஆசிரியர்களையும் காலத்திற்குகாலம் வேறு வேறுஅதிபர்களையும் கொண்டதாகமாற்றம் பெற்றது. ஆரம்பகாலஅதிபராகதிரு. ஆபிரகாம் யோசேப்பு (கதிரவேலு) உபாத்தியார் அவர்கள் அவர் வழி தொடர்ந்துஏறத்தாழ 14 அதிபர்களால் இப் பாடசாலை வழி நடாத்தப்பட்டு இன்றுஅதிபர் திரு. சி. தர்மரத்தினம் அவர்களால் சிறந்தமுகாமைத்துவத்தோடு 16 ஆசிரியர்களும் சுமார் 250 மாணவர்களையும் கொண்டுதரம் 9 வரைவகுப்புக்களைக் கொண்டதாகமிளிர்கின்றது. ஆரம்பகாலஅதிபர்களானதிரு.ஆபிரகாம் யோசேப்பு(கதிரவேலுஉபாத்தியார்நீர்வேலி), வசாவிளான்திரு. எஸ்.பிலிப்பு,வசாவிளான்திரு.எஸ்.அப்புத்துரைஇ கரம்பன்திரு. எஸ்.மரியாம்பிள்ளைஆகியோரதுபணிமிகச் சிறப்பானதாகும். இவர்களைத் தொடர்ந்துவசாவிளான் கே. பிலிப்பு, அச்சுவேலி எஸ்.கிறிஸ்சோஸ்தம் அவர்கள் தலைமையாசிரியர் பதவியைவகித்தார். அவர் தம் சேவைக்காலத்திலேபாடசாலைவளர்ச்சிஅடைந்தமைகுறிப்பிடத்தக்கவிடயம் ஆகும்.

ஆரம்பத்திலேஅமைக்கப்பட்டஒருஓலைக்குடிலுடனும் மரங்களின் கீழுமானவகுப்புக்கள் வசாவிளான் திரு. கே. பிலிப்புஅவர்களதுதலைமைஆசிரியர் காலத்திலே 40’x20’அளவுகொண்டபுதியஓலைக் கொட்டகைஒன்றுஅமைக்கப்பட்டது.

இவரைத் தொடர்ந்துஅச்சுவேலி எஸ். கிறிஸ்சோஸ்தம் அவர்களும் அவர் இளைப்பாறநீர்வேலிவடக்கைச் சேர்ந்ததிருமதி.சொர்ணம் அந்தோனிப்பிள்ளைஅவர்கள் இப் பாடசாலையின் பதில் தலைமைஆசிரியராகப் பணியாற்றினார்.

இவர் இளைப்பாற 1969ல்நீர்வேலிமத்தியைச் சேர்ந்தபண்டிதர் செ. துரைசிங்கம் இப் பாடசாலையின் தலைமைப் பொறுப்பைஏற்றுக் கொண்டார். இக் காலத்திலேயேதலைமையாசிரியர் பதவிஇஅதிபர் பதவிஎனப் பெயர் மாற்றம் பெற்றது. அக் காலத்;திலேயேஅதிகமான இந்துமாணவர்கள இப் பாடசாலையில் கல்விகற்க இணைந்துகொண்டனர். அக் காலத்திலேகுடிநீர் பிரச்சனையைத் தீர்க்ககாமாட்சிஐக்கியகைத்தொழிற் சங்கமுயற்சியால் குழாய் நீர் வழங்கப்பட்டது. அத்துடன் கூரையானதுஓட்டுக் கூரையாகமாற்றியமைக்கப்பட்டது.இவரதுகாலம் பாடசாலைவரலாற்றிலேஒருமைல்கல் எனக் கூறலாம்.

1973ல்பண்டிதர் துரைசிங்கம் அதிபர் இளைப்பாறகோப்பாய் மத்தியைச் சேர்ந்ததிரு. மு. வைத்திலிங்கம் அதிபர் பதவியைஏற்றுக் கொண்டார். இக் காலத்தில் மாணவரதுதொகைஅதிகரிக்கத் தொடங்கியது. இதனால் கட்டடத் தேவைஏற்படலாயிற்று. இதனால் 40’x20’, 60’x20’அளவுகொண்ட இரு புதியகட்டடங்கள் அமைக்கப்பட்டன. மலசலகூடஅமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. தளபாடத் தேவைகளும் உடனுக்குடனேபூர்த்திசெய்யப்பட்டுபாடசாலைக்கானசுற்றுமதில்  கட்டப்பட்டுஅத்துடன்பாடசாலைவரலாற்றிலேமுதன் முதலிலேபெற்றோர் ஆசிரியர் சங்கம் அமைக்கப்பட்டது. மாணவர்களிடையே இல்லங்கள் அமைக்கப்பட்டுகாமாட்சிஅம்பாள் சனசமூகவிளையாட்டுமைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. இக்காலத்திலேயேமாணவர்களிடையேகலைஉணர்வுபேணப்பட்டது. கலைவிழாவும் நடாத்தப்பட்டமைகுறிப்பிடத்தக்கது. அத்துடன் மாணவரிடையேசீருடைபேணப்பட்டது. இக்காலம் பாடசாலைவரலாற்றிலேபொற்காலம் எனக் குறிப்பிடத்தக்கதாகும்.இவர் 1985ம்ஆண்டு இளைப்பாறினார். இவரதுநினைவாகபரிசளிப்புநிதியம் ஒன்றுஆரம்பிக்கப்பட்டு இன்றுவரைசிறப்பாக இயங்கிவருகின்றது.

இவரைத் தொடர்ந்து1985 ஏப்ரலில் நீர்வேலிவடக்கைச் சேர்ந்ததிரு. மயில்வாகனம்அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார். இவரதுகாலத்திலே 42’x22’அளவுகொண்டபுதிய இரு மாடிக் கட்டடம் உருவாக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது. இக்காலத்திலேயுத்தம் காரணமாககட்டடங்கள் அழிவடைந்தன. எனினும் மீண்டும் 50’x20’, 40’x20’அளவுகொண்ட இரு மாடிக் கட்டடங்கள் உருவாக்கப்பட்டன. இக்காலத்திலேயேபாலர் வகுப்புமுதல் தரம் 5 வரையாக இருந்தவகுப்புக்கள் தரம் 8 வரைமாற்றப்பட்டன.

அத்துடன் மாணவர்களதுகுடிநீர் பிரச்சனையைத் தீர்க்கபுதியகுழாய்க்கிணறுஉருவாக்கப்பட்டது. இக்காலத்தில் 537 மாணவர்களுடன் இயங்கிய இப்பாடசாலையிலேமுதன் முதலில் மாணவர்களதுதிறன் மதிப்பிடப்பட்டுபரிசளிப்புவிழா இடம் பெற்றது.

இவரைத் தொடர்ந்துகோப்பாய் வடக்கைச் சேர்ந்ததிரு. த. இராசாஅதிபர் பதவியைஏற்றுக் கொண்டார். இவரதுகாலத்திலேபாடசாலையிலேகலைவிழாக்கள்இ விளையாட்டுப் போட்டிகள் என்பனசிறப்பாக இடம் பெற்றன. இவரைத் தொடர்ந்து 1992 இல் திரு.க. அருமைத்துரைஅவர்கள் அதிபராகக் கடமையாற்றினார். இக்காலப் பகுதியில் பாடசாலையின் மின் இணைப்புவசதிகள் பழையமாணவராகியதிரு. ச. புவிச்சந்திரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் செயற்பாட்டறைஒன்றும் இப் பாடசாலையில் உருவாக்கப்பட்டது. இக் காலத்திலேதான் ஆசிரியர் தினவிழாசிறப்பாகக் கொண்டாடப்பட்டமைபாடசாலைவரலாற்றிலேகுறிப்பிடத்தக்கஒருவிடயமாகும். இக் காலத்திலேதரம் 9 வகுப்புஆரம்பிக்கப்பட்டு இன்றுவரைதரம் 1 –9 வரைவகுப்புக்களுடன் சிறப்பாக இயங்கிவருகின்றது. திரு.க.அருமைத்துரைஅவர்களைத் தொடர்ந்து 2004ம்ஆண்டு இடைக்காட்டைச் சேர்ந்த ச. வேலழகன் அவர்கள் அதிபராகபொறுப்பேற்றார். இவரதுவருகைபாடசாலைக்குபுத்துயிர் ஊட்டியது. பாடசாலைவளர்ச்சிக்கெனபாடசாலைஅபிவிருத்திச் சங்கம் வருடரந்தபொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. அபிவிருத்திக் குழுஇ முகாமைத்துவக் குழுக்கள் என்பனவும் பழையமாணவர் சங்கம்இ உணவுமுகாமைத்துவக் குழுக்கள் இவரதுகாலத்திலேஉருவாக்கப்பட்டன. பாடசாலை நூல்நிலையம் ஒன்றுஅமைக்கப்பட்டது. இதுபாடசாலையின் பழையமாணவன் அருளானந்தஸ்ரீஞாபகமாகஉதயமாகியது.

இக் காலத்திலேபாடசாலைமாணவரதுகற்றல் வளவிருத்திக்காகசுவிஸ் நற்பணிச் சங்கத்தினரால் மேத்தலைஎறியி (OHP) ஒன்றுவழங்கப்பட்டுள்ளது. இவ்வாறுபடிப்படியாகவளர்ச்சிகண்டுபௌதீகவளவிருத்திபெற்ற இப் பாடசாலைமாணவரின் கல்விஅடைவுமட்டம் இணைபாடவிதானசெயற்பாடுகள் என்பவற்றிலும் உயர்ந்துகொண்டேசென்றது. இக் காலத்திலே 2005ம்ஆண்டுபாடசாலையானது நூற்றாண்டுபூர்த்தியைஎட்டியது.எனினும் 2007ம்ஆண்டுதனது நூற்றாண்டுவிழாவைகொண்டாடிபூரித்துநின்றது.திரு. ச. வேலழகன் அவர்களைத் தொடர்ந்து2007.11.19 நீர்வேலிதெற்கைச் சேர்ந்ததிரு. சி. தர்மரத்தினம் அவர்கள் பாடசாலையின் புதியஅதிபராகபொறுப்பேற்றுக் கொண்டார். இக் காலத்தில் இருந்து இன்றுவரைபாடசாலைவரலாற்றிலேஒருபுத்தெழுச்சிக் காலம் என்றே கூறலாம்.இக் காலத்திலேபரிசளிப்புவிழாமிகச் சிறப்பாக இடம் பெற்றது. அத்துடன் முறைசாராக் கல்விப் பிரிவு மூலம் சிங்களம் கற்பிக்கப்பட்டது.

அத்துடன் பாடசாலைக்குஅண்மையிலுள்ளகாணிரூபா 600,000/=கொடுத்துபாடசாலைக்குஎனக் கொள்வனவுசெய்யப்பட்டது. (சுவிஸ் நற்பணிச் சங்கம், நலன்புரிச் சங்கம்,கனடாநீர்வேலிகிளைபழையமாணவர் சங்கம் என்பவற்றின் பங்குஅளப்பெரியது.) இக் காலப் பகுதியில் பாடசாலையின் நுழைவாயிலில் பூப்பந்தல் ஒன்றுஉருவாக்கப்பட்து. தற்போதையஅதிபரின் காலத்திலேசமையற் கூடம்இ கணணிஅறை, விஞ்ஞான கூடம், பாண்ட் வாத்தியக் குழு, வாத்தியங்கள்இசுவிஸ் நற்பணிச் சங்கபுலமைப் பரிசில் திட்டம்இகனடாநற்பணிச் சங்கபுலமைப் பரிசில் திட்டம் என்பனவும் மாணவர் கல்விஅபிவிருத்திஊக்குவிப்பாகசெயற்பட்டது இக்காலத்திலேயேஆகும்.

மேலும் 70’x25’அடிகொண்ட இரு மாடிக் கட்டடத்திற்கானஅத்திவாரத்தினைநோர்வேயைச் சேர்ந்த செ. சண்முகநாதன்,இலண்டனைச் சேர்ந்த இ. சதீஸ்குமார்,பிரான்சினைச் சேர்ந்தஅன்ரனிதாஸ் ஆகியோரினதும் பழையமாணவர் சங்கஉறுப்பினர் மூலமும் நூறு ஆயிரமும் (100இ000ஃஸ்ரீ)சேர்த்துதற்காலிகமண்டபம் உருவாக்கப்பட்டுமாணவர்களின் வகுப்பறைத் தேவைகள் நிறைவுசெய்யப்பட்டன. அத்துடன்போட்டோபிரதி இயந்திரம்இ தொலைக்காட்சிஇ மல்ரிமீடியாபோன்றவையும் தெற்குப் பக்கம் 50 அடி, கிழக்குப் பக்கம் 35 அடிநீளமானமதில்கள்கட்டப்பட்டுள்ளது. விளையாட்டுமைதானவிஸ்தரிப்புக்காகமேலும் ஒருபரப்புகாணியும் கொள்முதல் செய்யப்பட்டது. பாடசாலையின் மேற்குப்பக்கபுதியநுழைவாயில்அமைக்கப்பட்டது. இவ்வாறாகபௌதீகவளவிருத்தியில் முன்நிற்கும் எமதுபாடசாலைகல்விவிருத்தியிலும் சிறப்பிடம் பெற்றுகோப்பாய் கோட்டத்தில் தனியிடம் பெற்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

1991ம்ஆண்டிலிருந்துதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலேசிறப்பான இடத்தைபெற்றுவரும் மாணவர்கள் இம்முறை 3 மாணவர்கள் சித்தியடைந்துகோப்பாய் கோட்டத்தில் 186 புள்ளிகளைப் பெற்றுஇகோப்பாய் கோட்டத்தில் 2வதுஇடத்தையும் விகிதாசாரஅடிப்படையில் 1ம் இடத்தையும் பெற்றமைபாராட்டுக்கும் மகிழ்விற்கும் உரியதாகின்றது. அத்துடன் திருக்குறள் மனனப் போட்டி, தழிழ்த்தினப்போட்டி,ஆங்கிலதினப்போட்டி, அறநெறிப்போட்டி, சிறுவர் சித்திரப் போட்டி, சமூகவிஞ்ஞானப் போட்டி, சிறுவர்தினப் போட்டி, சமயஅறிவுப்போட்டி, புத்தாக்கப் போட்டிஎன்பவற்றில் ஊக்கத்துடன் பங்குபற்றிகோட்ட,வலய,மாகாணமட்டங்களில் தமதாக்கிக் கொள்ளும் மாணவர்திறன் வியக்கத்தக்கதும்இபாராட்டுக்குஉரியதும் ஆகும்.

இவ்வாறுபௌதீகவளவிருத்தி, கல்வித்தரவிருத்திஎன்பவற்றில் உயர் நிலையில் மிளிரும் எமதுபாடசாலையின் சிறப்பபைவார்த்தைகளால், எழுத்துக்களால் வடிக்கமுடியாதவாறுநீண்டுசெல்வதுசிறப்பானதுஆகும்.

நன்றி.