10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களை வாழ்த்துவோமாக[:]

[:ta]

அத்தியார் இந்துக்கல்லூரியில் கா.பொ.த உயர்தர பரீட்சையில் இரண்டு மாணவர்கள் 3 ஏ சித்தியினை பெற்றுள்ளனர். இந்த சாதனை நீண்ட காலமாக நடைபெறவில்லை.  அதனை விட அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழக தகுதி பெற்றுள்ளதுடன் பலருக்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஊக்கமான கற்றலும் கற்பித்தலும் இடம் பெற்றதன் காரணத்தினாலேயே இவ் நல்விளைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக உழைத்த பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களை வாழ்த்துவோமாக.

மேலும் பாடசாலையின் கணனியின் பற்றாக்குறை தொடர்பாக எமது இணையத்தினால் வெளிக்காட்டப்பட்டது. அதன் பயனாக இரண்டு பழைய மாணவர்கள் இரு கணனிகளை வழங்கியிருந்தனர்.ஆகக்குறைந்தது 10 கணனிகளாவது கற்றலுக்கு தேவை. அதன் பின்னர் எவருமே கணனிகளை அன்பளிப்பு செய்ய முன்வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கின்றது. இன்னும் 2 நாளில் பாடசாலை மீளவும் ஆரம்பமாகின்றது. 2018 இல் கணனி சார்ந்த பாடங்கள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்குவோம்.

[:]

1 Comment

  1. Congratulations and best wishes to the Principal and all staff and students for their good job. Continue the great work.

Leave A Reply