www.newneervely.com நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

இதற்கு மேலேயுள்ள விளம்பரத்தில் ஒவ்வொருநாளும் பார்வையிடும் போதும் ஒரு தடவை click செய்க.

பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

வடக்கில் அதிகரிக்கும் கடும் வெப்பம்…பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்…..!! பிள்ளைகள் அவதானம்…!
வடக்கு மாகா­ணத்­தில் தற்­போது காணப்­ப­டும் அதிக வெப்­ப­மான கால­நிலை கார­ண­மாக உடல் நல­னில் பாதிப்­புக்­கள் ஏற்­ப­ட­லாம். வெப்­ப­மான கால­நிலை நில­வும்­போது, தேவை­யான ஆயத்­தங்­க­ளைச் செய்­வ­து­டன் உரிய அறி­வு­றுத்­தல்­க­ளைப் பின்­பற்­று­வ­தன் ஊடாக பாதிப்­புக்­க­ளைத் தவிர்க்க முடி­யும் என்று வடக்கு மாகாண சுகா­தா­ரச் சேவை­கள் பணிப்­பா­ளர் மருத்­துவர் ஆ.கேதீஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுரை
இது தொடர்­பாக அவர் அனுப்­பி­யுள்ள செய்­திக் குறிப்­பி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அதிக வெப்­பத்­தால் ஏற்­ப­டும் பாதிப்­புக்­களை கீழ்க் கண்­ட­வாறு வகைப்­ப­டுத்­த­லாம். வெப்­பத்­தால் ஏற்­ப­டும் பிடிப்­புக்­கள் பயிற்­சி­க­ளின் போது வெப்­பத்­தால் தசை­க­ளில் ஏற்­ப­டும் வலி, தசை இறுக்­கம். கை, கால் வயிற்றுப் பகு­தி­க­ளில் இடம்பெறலாம்.
உடல் இயக்­கங்­க­ளில் ஈடு­ப­டு­வதை விடுத்­துக் குளிர்ச்­சி­யான இடத்­தில் போது­மான ஓய்வு எடுப்­ப­தன் ஊடா­க­வும், போது­மான நீரைப் பரு­கு­வ­தன் ஊடா­க­வும் இதனைத் தவிர்க்­க­லாம்.
தவிர்க்க வேண்­டி­யவைவெப்­பத்­தால் ஏற்­ப­டும் அதிக சோர்வு – அதிக வெப்­பம் கார­ண­மாக ஏற்­ப­டும் அதிக சோர்வு. அதிக வியர்வை, அதிக உடற் சோர்வு கார­ண­மாக மயக்­கம் ஏற்­ப­ட­லாம். உடல் இயக்­கங்­க­ளில் ஈடு­ப­டு­வதை விடுத்­துக் குளிர்ச்­சி ­யான இடத்­தில் போது­மான ஓய்வு எடுக்க வேண்­டும்.
போது­மான நீரை ( 15 நிமி­டத்­து்­ககு ஒரு தடவை அரைக் கிளாஸ் நீர்) பருக வேண்­டும். உட­லைக் குளிர் நீரால் துடைக்க வேண்­டும்.
அதிக வெப்­பத்­தால் ஏற்­ப­டும் உடல் அதிர்ச்சி – அதிக வெப்­பத் தாக்­கம் கார­ண­மாக உடல் வெப்ப நிலை­யைச் சீரா­கப் பேண முடி­யாத அதிர்ச்சி. உடல் வெப்­ப­நிலை அதி­க­ரித்­தல், இத­யத் துடிப்பு விகி­தம், சுவாச விகி­தம் அதி­க­ரித்­தல், மனக் குழப்­பம், தலை­வலி, வலிப்பு, மயக்க நிலை என்­பன ஏற்­ப­டும்.
பாதிப்­ப­டைந்­த­வ­ரைக் குளிர்ச்­சி­யான இடத்­துக்கு மாற்­றல், இறுக்­க­மான ஆடை­க­ளைத் தளர்த்­தல், உட­லைக் குளிர்ந்த நீரால் துடைத்­தல், தேவை எனில் 1990 எனும் தொலை­பேசி இலக்­கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி நோயா­ளர் காவு வண்­டியை அழைத்து அவ­சர மருத்­துவ உதவி வழங்க ஏற்­பாடு செய்­தல் ஆகி­ய­வற்­றின் மூலம் இவற்­றைத் தவிர்க்க முடி­யும்.
பாட­சா­லை­க­ளில் பின்­வ­ரும் நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­று­வ­தன் ஊடாக இடர்­க­ளைத் தவிர்க்க முடி­யும்.பாட­சா­லை­க­ளில் மாண­வர்­கள் வெளி­யி­டங்­க­ளில், விளை­யாட்டு மைதா­னங்­க­ளில் விளை­யா­டு­வ­தைத் தவிர்க்க வேண்­டும். இடை­வே­ளை­யின் போதும் ஏனைய சந்­தர்ப்­பங்­க­ளின் போதும் மாண­வர்­கள் வெயி­லில் அதிக நேரம் செல­வி­டு­வ­தைத் தவிர்க்க வேண்­டும்.
மாண­வர்­கள் நீர் பரு­கு­வ­தற்­கும், ஓய்வு எடுப்­ப­தற்­கும் வச­தி­யாக 2 மேல­தி­க­மான இடை­வே­ளையை ஏற்­பாடு செய்­தல். வெயி­லில் காணப்­ப­டும்­போது அதிக வெப்­பத் தாக்­கத்­தைத் தவிர்ப்­ப­தற்­காக பாட­சா­லை­யி­லும், வீட்­டி­லும் மாண­வர்­க­ளைத் தேவை­யின்றி வெளியே அழைத்­துச் செல்­வ­தைத் தவிர்க்க வேண்­டும்.
அதிக வெப்­ப­மான காலத்­தில் பாட­சாலை இல்ல விளை­யாட்­டுப் போட்­டி­க­ளை­யும், விளை­யாட்­டுப் பயிற்­சி­க­ளை­யும் தவிர்க்க வேண்­டும்.
வச­தி­களை ஏற்­ப­டுத்­தல்
போது­மான குடி தண்­ணீரை வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்­வ­து­டன், வழ­மையை விட அதி­க­ள­வான நீரைப் பரு­கு­வ­தற்கு ஊக்­கப்­ப­டுத்த வேண்­டும்.
பாட­சா­லை­க­ளில் போது­மான குடி தண்­ணீர் வசதி இல்­லா­த­வி­டத்து, தேவை­யான குடி தண்­ணீரை வழங்க மாற்று ஏற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்­டும். இதற்­காக மாவட்­டச் செய­ல­ரின் உத­வியுடன், மாவட்ட இடர் முகா­மைத்­துவ இணைப்­பா­ள­ரின் உத­வி­யைப் பெற­லாம்.
போது­மான காற்­றோட்ட வச­தி­களை வகுப்­ப­றை­க­ளில் ஏற்­ப­டுத்த வேண்­டும். மின் விசி­றியை உப­யோ­கிக்க வேண்டி இருப்­பின் காற்­றோட்­டத்தை உறு­திப்­ப­டுத்தக் கத­வு­கள், யன்­னல்­களை முற்­றா­கத் திறக்க வேண்­டும். அடுக்கு மாடி­கள், தக­ரத் தக­டு­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட வகுப்­ப­றை­க­ளைப் போது­மான நிழ­லுள்ள, காற்­றோட்­ட­முள்ள வகுப்­ப­றை­க­ளுக்­குத் தற்­கா­லி­க­மாக இட­மாற்ற வேண்­டும்.
சிறப்பு ஆயத்­தங்­கள்
கழுத்­துப் பட்டி அணி­வ­தைத் தவி­ர்ப்­ப­து­டன், இய­லு­மா­ன­வரை இடுப்­புப் பட்டி அணி­வ­தை­யும் தவிர்க்க வேண்­டும். வெளி­யி­டங்­க­ளுக்­குச் செல்­லும்­போது தொப்­பியை அணிந்து அல்­லது குடை பிடித்­துச் செல்ல வேண்­டும்.கறுப்பு நிற ஆடை­களை அணி­வ­தைத் தவிர்க்க வேண்­டும். வழ­மையை விட அதிக நீரைப் பருக வேண்­டும்.
நீருக்­குப் பதி­லாக இள­நீ­ரைப் பரு­க­லாம். அதிக சீனியை உள்­ள­டங்­கிய காற்­ற­டைத்த பானங்­க­ளைப் பரு­கு­வ­தைத் தவிர்க்க வேண்­டும்.மாண­வர் ஒரு­வ­ரின் உடல் நலம் பாதிக்­கப்­பட்ட அறி­கு­றியை அவ­தா­னிக்­கு­மி­டத்து, உட­ன­டி­யாக ஆசி­ரி­ய­ருக்கோ அல்­லது வயது வந்த நபர் ஒரு­வ­ருக்கோ தெரி­யப்­ப­டுத்­து­வ­து­டன் உட­ன­டி­யாக மரு­த்துவ சேவை­களை வழங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்ய வேண்­டும் எனவும்  குறித்த அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments