பாலர்பகல்விடுதியில் புதியநிர்வாகசபை தெரிவு இடம்பெற்றது.
பாலர் பகல் விடுதியில் 26.04.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகசபை தெரிவு இடம்பெற்றது. நிலையத்தின் தலைவர் திரு.செ.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் கடந்த கால கூட்ட அறிக்கை செயலாளரால் வாசிக்கப்பட்ட பின்பு கடந்த ஒரு வருடத்திற்கான வரவு செலவு கணக்கு பொருளாளர் அவர்களால் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகசபை தெரிவும் இடம்பெற்றது. அதில் தலைவராக திரு.செ.பத்மநாதன் அவர்களும் உபதலைவராக திரு.வரதகுலசிங்கமும் செயலாளராக திரு.வே.குணசீலனும் உபசெயலாளராக திரு.நா.குமணனும் பொருளாளராக திரு.பொ.பவானந்தன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். நிர்வாகசபை உறுப்பினர்களாக திரு.த.பத்மநாதன் திரு.இ.நிதீபன்திருமதி உ.யோகானந்தா திரு.பா.சசிகுமார் திரு.தி.முத்துக்குமார் திரு.தே.குகானந்தம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
Congratulations to the new committee!!!!
Let’s work together for the future of the crèche.
Congratulations and best wishes. Keep up the good work
Congratulations Mr.S.Pathmanathan & team.
Congratulations and best wishes to Mr.S.Pathmanathan & new team. We will always give all kind of support to our crèche.