10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

பாலர்பகல்விடுதி இணையத்தளம் முடிவடைகின்றது

நீர்வேலி தெற்கு பாலர்பகல்விடுதியின் www.palarnilayam.com இணையத்தளம் 19.07.2020 அன்றுடன் நிறைவுக்கு வருகின்றது. 2013 ஆம் ஆண்டு 7 ம் மாதம் 19 ம் திகதி நிர்வாகத்தினரின் வேண்டுகோளிற்கு இணங்க எமது இணையத்தினால் இலவசமாக வடிவமைக்கப்பட்டு இலவசமாக சுமார் ஏழு ஆண்டுகள் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. வருடத்திற்கு ஒருமுறை சேவையகம் மற்றும் www.palarnilayam.com பெயருக்கான கட்டணம் மட்டும் பாலர்பகல்விடுதியினால் செலுத்தப்பட்டது. அத்துடன் பாலர் பகல்விடுதியில் பணிபுரியும் கணனி சார்ந்த அசிரியர்கள் பலருக்கு பயிற்சியளிக்கப்பட்டு தடையில்லாமல் தொடர்ந்தும் எம்மால் இலவச சேவை செய்யப்பட்டு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் தலைவர் அவர்களினால் மேற்படி இணையத்தினை வேறு ஒரு நிறுவனத்திற்கு மாற்றுமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதற்கமைய 19.07.2020 அன்று கட்டணம் செலுத்தி புதுப்பிக்கும் திகதியில் மேற்படி இணையத்தளம் செயல்படாது எனவும் அறியத்தருகின்றோம். (இணையம்)


0 Comments

Leave A Reply