பாலர்பகல் விடுதி – வருடாந்த விளையாட்டு விழா2013
பாலர்பகல் விடுதியின் வருடாந்த விளையாட்டு விழா எதிர்வரும் 28.07.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சுப்பிரமணிய சனசமூகமுன்றலில் நடைபெறவுள்ளது.தலைவர் திரு.செ.பத்மநாதன் தலமையில் நடைபெறவுள்ள இவ்விழையாட்டுவிழாவில் பிரதமவிருந்தினராக செல்வி ஜெயா தம்பையா (பணிப்பாளர் -ஆரம்பப்பிள்ளைப்பருவ அபிவிருத்திப்பிரிவு கல்வியமைச்சு வடமாகாணம்)அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக திரு.த.கிரிசாந் (சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.சி.தயாபரன்(கிராம அலுவலர் நீர்வேலிதெற்கு),திரு.ப.சதீஸ்குமார்(பொதுச்சுகாதாரப்பரிசோதகர்) அவர்களும் கௌரவ விருந்தினா்களாக திரு.சிவலிங்கம்(பொது முகாமையாளர் வலி. கி.ப. நோ. சங்கம் நீர்வேலி) திரு.செ.பாலசுந்தரம் (பழையமாணவர்-பிரான்ஸ்) ஆகியோரும் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.
நிகழ்ச்சி நிரல்
- விருந்தினர்கள் அழைத்துவரல்
- மங்கலவிளக்கேற்றல்
- இறைவணக்கம்
- கொடியேற்றல்
- நிலையக்கீதம் இசைத்தல்
- ஒலிம்பிக்தீபம் ஏற்றல்
- சத்தியப்பிரமாணம்
- வரவேற்புரை-மேற்பார்வையாளர்-பாலர்பகல்விடுதி
- ஆசியுரை-பிரம்மசிறி இராஜேந்திரக்குருக்கள் சுவாமிநாதக்குருக்கள்(நீர்வேலி கந்தசுவாமி கோவில்)
- பிரதமவிருந்தினர் விழாவை ஆரம்பித்து வைத்தல்
- விழையாட்டு நிகழ்வுகள்
- இடைவேளை
- இசையும் அசைவும்
- தலமையுரை
- விருந்தினர் உரை
- பரிசில் வழங்கல்
- நன்றியுரை-திருமதி.உ.யோகானந்தா(செயலாளர்)
- கொடியிறக்கம்
அனைவரும் வருகைதந்து இவ்விளையாட்டுவிழாவைச்சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
இவ்வண்ணம்
ஆசிரியர்கள், மாணவர்கள்
நிர்வாகத்தினர், பெற்றோர்கள்
பாலர்பகல்விடுதி.
0 Comments