10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

பாலர் பகல்விடுதியில் புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டார்

நீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதியில் 26.04.2021 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய தலைவராக அச்செழு சைவப்பிரகாச வித்தியால அதிபர் திரு. வேலுப்பிள்ளை குணசீலன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நல்வாழ்த்துக்கள் திரு குணசீலன் சேர் அவர்களே . இதுவரை காலமும் தலைவராக இருந்து பாலர் பகர்விடுதியினை புதிய நிலைக்கு கொண்டு  சென்றவர் திரு.செ.பத்மநாதன்  அவர்கள். இலண்டனில் உள்ள  நலன்புரிச்சங்கம் 27 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவிதமான பொதுக்கூட்டமோ உறுப்பினர்கள் மாற்றமோ செய்யாமல் இயங்குவது போல் அல்லாமல் பாலர்பகல்விடுதி நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் கணக்கறிக்கை சமர்ப்பிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை  உறுப்பினர்கள் மாற்றம் என ஜனநாயக செயற்பாடுகள் உயர்ந்த தரத்தில் பேணிவரப்பட்டன. அத்துடன்  அத்தியாவசியமற்ற செலவுகளை குறைத்து அவசியமான செலவுகளை வினைத்திறனுடன் செய்து வங்கி நிலுவையினையும்  பாலர்பகல்நிலைய வங்கிக் கணக்கில் போதுமான அளவு  இட்டு அதிகமான வளங்களை பெருக்கியும்  மாணவர்கள் தொகையினை தொடர்ந்தும் அதிகமாக பேணியும் வந்துள்ளார். திரு.பத்மநாதன் அவர்கள் பொறுப்பேற்ற போது வங்கி நிலுவையானது முன்னைய நிர்வாகத்தினால் பூச்சிய நிலுவையில் வழங்கப்பட்டமை குறிப்பித்தக்கது.  எனவே இக்கால இளைஞர்கள் பாலர்பகல்விடுதியினுடைய சொத்துக்களை தொடர்ந்தும் பாதுகாப்பதுடன் மேலும் அதிகரித்து வளம்படுத்தவேண்டும் என்பது கட்டாயமாகும்.  எனவே புதிய நிர்வாகம் பாலர்பகல்விடுதியினை  மேலும் வளர்க்க வேண்டியது அவர்களது கட்டாயமாகும். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

0 Comments