10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

புதிதாக செய்யப்பட்ட திருச்சப்பறம் வெள்ளோட்டவிழா

Mathagal2010Amman1நீர்வேலி அரசகேசரி விநாயகரில் புதிதாக செய்யப்பட்ட திருச்சப்பறம் எதிர்வரும் 25.09.2015 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு வெள்ளோட்டம் விடப்படவுள்ளது. நிர்வாக சபைத்தலைவர் திரு.க.கிருபாகரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரம்மஸ்ரீ சோமதேவக்குருக்கள் பிரம்மஸ்ரீ சந்திரசேகரக்குருக்கள் பிரம்மஸ்ரீ தியாகராஜக் குருக்கள் பிரம்மஸ்ரீ சுவாமிநாதக்குருக்கள் ஆகியோர் ஆசியுரை வழங்கவுள்ளனர். வாழ்த்துரையினை சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் சொஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் அவர்களும் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசான் திரு.த.ந.பஞ்சாட்சரம் அவர்களும் சொற்கிழார் திரு லலீசன் அவர்களும் வழங்கவுள்ளனர். சப்பறத்திருவிழா உபயகார்களின் (திரு.மா.திருவாசகம் –  இலங்கைநாதன் -இலண்டன்  ) அன்பளிப்பில் இச்சப்பறம்   உருவாக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave A Reply