புதிய கட்டிடத்தில் வகுப்புக்கள் நடைபெறுகின்றன
நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் சுவிஸ் நாட்டில் உள்ள இலங்கைக்கான அமைப்பொன்றினால் கட்டி முடிக்கப்பட்டுள்ள இரண்டு மாடிக்கட்டிடத்தில் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. மிக அண்மையில் கட்டிமுடிக்கப்பட்ட இக்கட்டிடம் திறப்புவிழா செய்வதில் இழுபறியில் இருந்தது வந்துள்ளது. திறப்புவிழா செய்யாமலே வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாடசாலைமாணவர்களின் பெற்றோர்கள் கட்டிடவேலைகளில் மும்மரமாக ஈடுபட்டிருந்தனர்.வர்ணம் தீட்டுதல் கூரை அமைத்தல் போன்ற நேரங்களில் அதிபரின் வழிகாட்டலில் இக்கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடிக்கட்டிடங்களினால் பாடசாலை முகப்பிற்கு நல்லதொரு தோற்றம் கிடைத்துள்ளது.
0 Comments