10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியின் புதிய அதிபராக திரிகரன்

புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியின் புதிய அதிபராக 11.01.2021 தொடக்கம் செயற்படுமாறு நீர்வேலியைச் சேர்ந்த திரு. சின்னத்தம்பி திரிகரன் அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.திரிகரன் நீர்வேலியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவர். சோமஸ்கந்தக் கல்லூரியின் பழைய மாணவர். விஞ்ஞானத்துறைப் பட்டதாரி. கணித ஆசிரியராக வலிகாமம் கிழக்கில் புகழ்க்கொடி நாட்டியவர். அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்தவர் ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்தின் பிரதி அதிபர் – ஊரெழு ஸ்ரீ கணேச வித்தியாலய அதிபர் – அச்சுவேலி மத்திய கல்லூரி அதிபர் என அவர் சேவையாற்றிய நிலையங்களில் தனது திறன் மிக்க சேவையால் புகழ் ஈட்டியிருக்கிறார்.அதிபர் திரு.சி.திரிகரன் அவர்களுக்கு  எமது இணையம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

(Message from laleesan sir’s fb)

0 Comments