10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

புலமைப்பிரிசில் பரீட்சை- நீர்வேலிப் பாடசாலைகளில் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் முதலிடம்

 

black-boy-readingபுலமைப்பிரிசில் பரீட்சைப்பெறுபேறு இன்று வெளியானது. நீர்வேலிப் பாடசாலைகளில் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் 172 புள்ளிகளைப்பெற்று முதலிடம் வகிப்பதுடன் மேலும் 3 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 33 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். அதில் 21 மாணவர்கள் 100 புள்ளிக்கும் அதிகமாக எடுத்திருந்தனர்.அதுபோல நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் 20 மாணவர்கள் பரீட்சைக்குத்தோற்றியிருந்தனர்.அதில் 161 புள்ளிகளை ஒருமாணவன் எடுத்திருந்தார் அவருடன் மேலும் ஒரு மாணவி சித்தியடைந்திருக்கின்றார்.அத்தியார் இந்துக்கல்லூரியில் 160 புள்ளிகளைப்பெற்று ஓரு மாணவன் சித்தியடைந்துள்ளார்.நீர்வேலிப்பாடசாலைகளில் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் 4 பேரும் றோ.க.த.க பாடசாலையில் 2 பேரும் அத்தியார் இந்துக்கல்லூரியில் ஒருவருமாக மொத்தம் ஏழு போர் சித்தியடைந்துள்ளனர்.அத்துடன் நீர்வேலி தெற்கு இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் ஒரு மாணவி 139 புள்ளிகளைப்பெற்றுள்ளார்.இவர்கள் அனைவருக்கும் எமது நீர்வேலி இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.சித்தியடைந்த மாணவர்கள் விபரம்

  • கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்

கணேசமூர்த்தி பிரசாத்         172 புள்ளிகள்

இரத்தினேஸ்வரன் யதுர்சிகன்   158 புள்ளிகள்

ஜெயச்சந்திரன் வைஸ்ணவி   157  புள்ளிகள்

பத்மராஜா அபிசனன்  154 புள்ளிகள்

  • நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலை

குலசிங்கம் பிரவீண்  161 புள்ளிகள்

சிவகுமாரன் ஜிதுசாயினி  158 புள்ளிகள்

  • அத்தியார் இந்துக்கல்லூரி

சிவராஜா காவியன்   160 புள்ளிகள்

0 Comments

Leave A Reply