பேச்சியம்மன் ஆலயத்தில் பொங்கல் விழா
நீர்வளமும் நிலவளமும் நிறைந்த நீர்வேலி கிராமத்தின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளி பேச்சியம்மன் நீர்வேலி தெற்கு மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.250 வருடத்திற்கு மேற்பட்ட பழமை வாய்ந்த இவ் ஆலயம் வருடா வருடம் ஆனி மாதம் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.அதுபோல இவ் வருடமும் அதாவது இன்று 28.06.2013 வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் வீரபத்திரர் ஆலயத்தில் முதல் மரியாதை செய்யப்பட்டு பின்னர் பேச்சியம்மனில் பொங்கல் விழா ஆரம்பமாகியது.சகல விதமான பொங்கல் வகைகளும் பலவகையான புட்டுவகைகளும் வடைமாலைகள் பழவகைகள் மற்றும் ஏனைய பலகாரவகைகளும் அம்மனுக்கு படைக்கப்பட்டன.