10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

பொதியிடல் நிலையமும் களஞ்சியமும் (வெங்காயச்சங்கம்) திறப்பு விழா 26.01.2013

100_2842வலி கிழக்கு தென்பகுதி பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கீழ் உள்ள வெங்காயச்சங்கம் தற்போது புனரமைக்கப்பட்டு அழகியதோற்றத்துடன் காட்சியளிக்கிறது.இந்நிலையம் தற்போது பொதியிடல் நிலையமும் களஞ்சியமும் எனும் பெயரில் 26.01.2013 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு திறக்கப்படவுள்ளது.வலி கிழக்கு தென்பகுதி பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் திரு.நா.சுந்தரலிங்கம் தலமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதமவிருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சிறப்புவிருந்தினர்களாக  திருமதி மதுமதி வசந்தகுமார் (கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்)அவர்களும் பிரதேசசெயலர் ம.பிரதீபன் அவர்களும் கூட்டுறவு அபிவிருத்தி உதவிஆணையாளர் திரு்க.அருந்தவநாதன் அவர்களும் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்ச்சி நிரல்

  1. மங்களவிளக்கேற்றல்
  2. பெயர்பலகை நீக்கம்
  3. மண்டபம் திறந்துவைத்தல்
  4. பொதியிடல் ஆரம்பித்து வைத்தல்
  5. வரவேற்புரை
  6. தலமையுரை
  7. சிறப்புவிருந்தினர்கள்  உரை
  8. பிரதமவிருந்தினர்கள் உரை
  9. நன்றியுரை

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

பணிப்பாளர்களும்

பணியாளர்களும்

வலி கிழக்கு தென்பகுதி பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்

நீர்வேலி.

 (என அறிவிக்கப்பட்டுள்ளது.)

0 Comments

Leave A Reply