10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]மனைவிக்கு பயந்தவர்கள்..[:]

[:ta]ஒருமுறை அக்பருக்கும் அவருடைய அமைச்சர் பீர்பாலுக்கும்
ஒரு கருத்துவேறுபாடு ஏற்பட்டது.“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது; மனைவியின்சொல்படிதான் கேட்பார்கள்”, என்று பீர்பால் கூறினார்.அக்பருக்குமகா கோபம். ‘அதெப்படி இவ்வாறு பொதுமைப் படுத்தி இப்படிக்கூறலாம்? நிச்சயம் பல ஆண்கள் தத்தம் மனைவியருக்குபயப்படாதவர்களாகவும் மனைவி சொற்படி கேட்காதவர்களாகவும்தான் இருப்பார்கள்.

வாக்குவாதம் முற்றியதால் டில்லி மாநகரில் மனைவிக்கு பயப்படாத
கணவனைக் காட்டுவதாகச் சொல்லித் தம் கட்சியை நிரூபிக்க அக்பர்
பீர்பாலைத் தம்முடன் அழைத்தார்.

டில்லியின் பெரிய மைதானத்தில்
வந்து கூடுமாறு டில்லியின் மணமான ஆண்களையெல்லாம் தண்டோராப்
போட்டு அழைத்தனர்.

அவ்வாறே அந்த மைதானத்தில் அனைவரும் கூடினர்.

பீர்பால் ஓர் அறிவிப்புச் செய்தார்.

“இந்தக் கூட்டத்தில் யார் யாரெல்லாம் தம்முடைய மனைவிக்குப்
பயப்படுகிறீர்களோ, மனைவியின் பேச்சைக் கேட்கிறவர்களோ,
அவர்களெல்லாம் வலது பக்கம் செல்லுங்கள்”.

முதலில் சிறுகச்சிறுக; பின்னர் பெருமளவில் அனைவரும்
வலப்பக்கம் சென்று நின்றனர்.

திடீரென்று ஒரே ஒருவன் மட்டும் தயங்கித் தயங்கிப் பார்த்துவிட்டு,
அந்த மனைவியர் சொல் விளங்கும் பெருமாள்கள் கூட்டத்தினின்றும்
வெளிப்பட்டு இடப்பக்கம் சென்று ஒதுங்கிநின்றுகொண்டான்.

அக்பர் ஆரவாரித்தார். “அதோ ஒரு உண்மையான ஆண் மகன்!”
“பொறுங்கள் ஆலம்பனா.

அவனை விசாரிப்போம்”, என்றார் பீர்பால்.
தொடர்ந்து அந்த ஆளை அருகில் கூட்டிவரச்செய்தார்.

அவன்
நடுங்கிக்கொண்டே வந்தான். அவனிடம் பீர்பால் கேட்டார்.

“ஏனப்பா? நீ ஏன் மனைவியின் சொல்படி கேட்கும் கூட்டத்திலிருந்து
பிரிந்துவந்தாய்?”

அவன் சொன்னான்: “நான் வீட்டை விட்டு வரும்போது,
‘பெரிய கூட்டம் கூடும் இடத்தில் கூட்டத்தோடு சேரவேண்டாம்’,
என்று என் மனைவி எச்சரித்து அனுப்பிவைத்தாள்.

ஆகவேதான் நான்
கூட்டத்திலிருந்து ஒதுங்கித் தனியே வந்துவிட்டேன்”

[:]

0 Comments

Leave A Reply